பாரிய கையிருப்பு மற்றும் வங்கியிலிருந்த தங்கம் மாயமானது எப்படி!
7, 8 பில்லியன் என்ற பாரிய கையிருப்பு எவ்வாறு பூச்சியமானது? மத்திய வங்கியிலிருந்த தங்கம் எவ்வாறு காணாமல்போனது? என பேராயர் மெல்கம் ரஞ்சித் கேள்வி எழுப்பியுள்ளார்.
அத்துடன் ஏன் இவை பொறுப்பற்ற முறையில் வீணாக்கப்பட்டன என்பது குறித்து எப்போதேனும் ஒரு நாளில் விசாரிக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
நாட்டில் பொருளாதார நெருக்கடியால் தவிக்கும் மக்களுக்கு தற்போது ஏற்பட்டுள்ள துன்பத்திற்கு இதுவே தீர்வாகும் பல ஆண்டுகளாக இந்த நாட்டின் வளங்களை வீணடிக்கும் செயல் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக குறிப்பிட்ட அவர், இந்தப் பணத்தை வீணடித்தவர்கள் யார் என்பதை மக்கள் அறிந்துகொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் 2, 3 ஆண்டுகளில் நாட்டை முழுமையாக கையேந்தும் நிலைக்கு கொண்டுசென்றவர் யார் என்பது குறித்து முழுமையாக விசாரித்து, அவர்களிடமிருந்து அவற்றை மீளப்பெற வேண்டும் என பேராயர் மெல்கம் ரஞ்சித் வலியுறுத்தினார்.