கிளப் வசந்த நிர்வாண புகைப்படங்கள் வெளியானது எப்படி?
அதுருகிரிய பச்சை குத்தும் மையத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட கிளப் வசந்த சடலத்தின் நிர்வாண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியானது தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அது தொடர்பில் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் சுமார் 30 பேரிடம் சாட்சியங்களை பதிவு செய்துள்ளதாக அத்துருகிரிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிரேத பரிசோதனைகள்
சடலத்தின் பிரேத பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டபோது, மருத்துவ மாணவர்களும் இணைந்திருந்தனர்.
இந்நிலையில் அவர்களின் ஊடாக குறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளதாக தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், கொலைச் சம்பவம் தொடர்பான காணொளி காட்சிகளை வெளியிடும் பணியில் ஈடுபட்டிருந்த உள்ளூர் ஊடகவியலாளர்களிடம் இருந்தும் குறிப்புகள் மற்றும் உண்மைகளை எடுத்துக் கொண்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.