நாட்டின் வெளிப்பகுதிகளில் டெல்டா வைரஸ் பரவியது எப்படி...
நாட்டில் டெல்டா வைரஸானது வெளிப்பகுதிகளில் எவ்வாறு பரவியது என்பது குறித்து முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
நாட்டின் வெளிப்புற பகுதிகளுக்கு கொரோனா வைரஸின் கடுமையான மாறுபாடான டெல்டா பரவியது எப்படி என்பதை அறிய அடுத்த வாரம் பரிசோதனைகள் ஆரம்பிக்கப்பட உள்ளன என்று ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் ஒவ்வாமை நோயெதிர்ப்பு மற்றும் செல் உயிரியல் தலைவர் டொக்டர் சந்திம ஜீவந்தர தெரிவித்தார்.
டெல்டா மாறுபாடானது வெளிப்புற பிரதேசங்களில் பரவியுள்ளமை தொடர்பில் ஆய்வு செய்யவதற்கு சுகாதார துறை பிரதானிகள் வழங்கிய அறிவுறுத்தலுக்கு அமையவே பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இதேவேளை, டெல்டா மாறுபாடானது கொழும்பில் 100% பரவுவதாக முன்னர் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.