இலங்கையர்கள் சென்ற கப்பல்மீது ஹௌத்தி தீவிரவாதிகள் தாக்குதல்; மூவர் பலி
இலங்கை, இந்தியா உட்பட வெளிநாட்டு பணியாளர்களுடன் பயணித்த கப்பல் மீது தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
செங்கடலில் மேற்குலக நாடுகளின் சரக்கு கப்பல்கள் மீது ஹௌத்தி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் கப்பலில் இருந்த மூன்று பணியாளர்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச தகவகள் கூறுகின்றன.

MV True Confidence Ship
23 பணியாளர்களுடன் பயணித்த பார்படோஸ் கொடி பறக்கவிடப்பட்ட MV True Confidence என்ற கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், கப்பல் கடலில் மூழ்கியுள்ளது.
தீவிரவாதிகளின் தாக்குதலால் கப்பல் தீப்பற்றியுள்ளதுடன் குறைந்தது மூன்று பணியாளர்கள் உயிரிழந்துள்ளனர் என்றும் நான்கு பேர் வரை தீக்காயங்களுக்கு உள்ளாகினர் எனவும் அமெரிக்க மற்றும் பிரித்தானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தாக்குதலுக்குள்ளான கப்பலில் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த 15, பேர், நான்கு வியட்நாமியர்கள், இரண்டு இலங்கையர்கள், ஒர் இந்தியர், மற்றும் நேபாளம் நாட்டைச் சேர்ந்த ஒருவர் உட்பட்ட 23 பணியாளர்கள் பயணித்துள்ளனர்.
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        