கணவரை வரவேற்க விமான நிலையம் சென்ற பெண்; தீப்பிடித்து எரிந்த வீடு; தமிழர் பகுதியில் சம்பவம்
திருகோணமலை தம்பலகாமம் பிரதான வீதியில் இன்று (26) வீடொன்று தீப்பற்றி எரிந்ததில் முற்றாக நாசமாகியுள்ளது
வீட்டு உரிமையாளர் குவைத் நாட்டில் இருந்து நாடு திரும்பவுள்ள நிலையில் கணவரை வரவேற்க மனைவி பிள்ளைகளுடன் கொழும்புக்கு சென்றபோதே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
பல இலட்சக்கணக்கான பெறுமதியான பொருட்கள் நாசம்
திருகோணமலை மாவட்ட தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பலகாமம் பிரதான வீதியில் ஒரே காணிக்குள் இரு வீடுகள் அமைட்ந்துள்ளது.
அதில் ஒன்றில் வீட்டு உரிமையாளரின் குடும்பமும், மற்றுமொரு வீட்டில் உரிமையாளரின் தாயும் , இன்னொரு மகளும் தூங்கிய நிலையில் புகை வாசனை, ஒருவகைச் சத்தம் ஏற்பட்டதை அடுத்து வெளியேறியுள்ளனர்.
அதன் பின்னர் அருகாமையில் உள்ள வீட்டாருக்கு அறிவித்த நிலையில் திருகோணமலை மாநகர சபையின் தீயனைக்கும் பிரிவுக்கு அறிவிக்கப்பட்டது. தீயைக் கட்டுப்பாட்டுக்குள் தீயனைக்கும் பிரிவினர் விரைந்து செயற்பட்டதாக தெரியவருகிறது.
வீட்டு உரிமையாளருக்கு தொலைபேசி ஊடாக அயலவர்கள் தகவல் கூறியுள்ளனர். வீட்டில் உள்ள மின்சாதனப் பொருட்களான தொலைக்காட்சி, குளிர்சாதனப் பெட்டி உள்ளிட்ட பல தளபாடங்கள் என பல இலட்சக்கணக்கான பெறுமதியான பொருட்கள் நாசமடைந்து எரிந்து சாம்பலாகியதாகத் தெரிவிக்கின்றனர்.
இது மின் கசிவா? அல்லது திட்டமிடப்பட்ட சதியா? என்பது பற்றி தம்பலகாமம் பொலிஸார் விசாரனைகளை ஆரம்பித்துள்ளனர்.