மே மாத இறுதிவரை நீடிக்கும்!
நாட்டில் நிலவும் வெப்பமான காலநிலை மே மாதம் இறுதி வாரம் வரை தொடரும் எனவளிமண்டலவியல் திணைக்களத்தின் இணை இயக்குனர் பிரித்திகா ஜெயக்கொடி கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
அதிக வெப்பம்
இன்றைய நாட்களில் நமது உடல் வியர்வை அதிகமாக வெளியேறுகிறது. மேலும், அதிக வெப்பம் காரணமாக, உடல் அசௌகரியமாக உணர்கிறது.
இலங்கையைச் சுற்றியுள்ள வளிமண்டலத்தில் காற்றின் ஓட்டம் குறைந்ததே இதற்கு முக்கியக் காரணம்.
இந்த நிலை மே இறுதி வரை இருக்கும். எனினும் தினமும் இடியுடன் கூடிய மழை பெய்து வருவதால் வளிமண்டலத்தில் குளிர்ச்சி நிலவுவதாகவும் அவர் கூறுகிறார்.
எதிர்வரும் ஏப்ரல் 15 ஆம் திகதி வரை நிலவும் வெப்பம் மற்றும் ஈரப்பதமான காலநிலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன் வானம் மேகமூட்டம் இல்லாமல் காணப்படுவதாலும் சூரிய ஒளி நேரடியாக பூமியின் மீது படுவதாலும் வெப்பமான காலநிலை அதிகமாக உணரப்படும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரித்திகா ஜெயக்கொடி மேலும் தெரிவித்துள்ளார்.