இலங்கையில் சூடுபிடிக்கும் கிறிஸ்துமஸ் அலங்கார பொருட்கள் விற்பனை!
இலங்கையில் பண்டிகைக் கால தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக கடந்த சில வாரங்களாக கிறிஸ்துமஸ் அலங்காரங்கள் மற்றும் அத்தகைய பொருட்கள் பெருமளவிலான சரக்குகளில் வந்துள்ளதாக சுங்கப் பேச்சாளர் சிரேஷ்ட பணிப்பாளர் தெரிவித்தார்.
இறக்குமதி கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டதில் இருந்து இதுவரை இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களில் கிறிஸ்துமஸ் அலங்காரங்கள் மற்றும் இன்னபிற பொருட்கள் முதலிடம் பிடித்துள்ளதாக இலங்கை சுங்கத்துறை தெரிவித்துள்ளது.
கடந்த ஒக்டோபர் மாதத்திலிருந்து இலங்கையில் தனியார் மோட்டார் கார்கள் தவிர அனைத்து பொருட்களுக்குமான இறக்குமதி கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டுள்ளது.
கட்டுப்பாடு விதிக்கப்பட்ட பொருட்களில் பண்டிகை அலங்காரங்களும் இரண்டு வருடங்களாக தடைசெய்யப்பட்டிருந்தன என்றும் அவர் கூறினார்.
மேலும் பல வர்த்தகர்கள் இந்த வருடம் வியாபாரத்தில் தீவிரமாக ஈடுபட்டதாகத் தெரிகிறது.
அலங்காரங்களுக்கு அடுத்தபடியாக சிறப்பு உணவுப் பொருட்கள், மற்றும் மாபிள்கள் ஆகியவையும் தற்போது இறக்குமதிப் பட்டியலில் முதலிடம் வகிக்கின்றன என்று அவர் கூறினார்.