ட்ரிப்ஸ் இற்கு பதில் நோயாளிக்கு ஜூஸை ஏற்றிய மருத்துவமனை; அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்!
இந்தியாவின் உத்தரப்பிரதச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் டெங்கு நோயாளிக்கு ரத்த தட்டுகளுக்கு (blood platelets) பதிலாக பழச்சாறு ஏற்றப்பட்டதால் நோயாளி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பியாகராஜுக்கு பிளாஸ்மாவுக்கு பதிலாக மோசாம்பி சாறு கொடுக்கப்பட்டதால் அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. 32 வயதான நோயாளி ஒருவரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.
சாத்துக்குடி பழச்சாறு
மருத்துவமனையில் பிளாஸ்மா என்று குறிக்கப்பட்ட ஒரு பையில் சாத்துக்குடி பழச்சாறு வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. மருத்துவமனையால் இந்த செயலால் நோயாளியின் உடல்நிலை மோசமடைந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து நோயாளி வேறொரு தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில், அங்கு அவர் இறந்துவிட்டார்.
प्रयागराज में मानवता शर्मसार हो गयी।
— Vedank Singh (@VedankSingh) October 19, 2022
एक परिवार ने आरोप लगाया है कि झलवा स्थित ग्लोबल हॉस्पिटल ने डेंगू के मरीज प्रदीप पांडेय को प्लेटलेट्स की जगह मोसम्मी का जूस चढ़ा दिया।
मरीज की मौत हो गयी है।
इस प्रकरण की जाँच कर त्वरित कार्यवाही करें। @prayagraj_pol @igrangealld pic.twitter.com/nOcnF3JcgP
இதனையடுத்து மருத்துவமனை ஊழியர்கள் மீது மாநில அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயிரிழந்தவரின் குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இந்நிலையில் சம்பவம் நடந்த மருத்துவமனைக்கு தற்போது சீல் வைக்கப்பட்டு, சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரபிரதேச துணை முதல்வர் உத்தரவிட்டுள்ள நிலையில் குறித்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்திட்யுள்ளது.