பிப்ரவரியில் ஒரே ராசிக்குள் இணையும் 6 கிரகங்கள்: அந்த அதிஷ்டமான ராசி எது தெரியுமா?
ஜோதிட வல்லுநர்களின் கூற்றுப்படி, பெப்ரவரியில் சில கிரகங்களின் சேர்க்கையால் அபூர்வ யோகங்கள் உருவாகி வருகின்றன. பெப்ரவரி மாதத்தின் தொடக்கத்தில் சூரியன், புதன், சந்திரன், சனி ஆகிய கிரகங்கள் மகர ராசியில் இணைந்துள்ளன.
இதேவேளை, சந்திரன் - சுக்கிரன் இருவரும் மீண்டும் மகர ராசிக்குள் நுழைய இருக்கிறார்கள். இவ்வாறான சூழலில், பஞ்சகிரஹி யோகத்தின் சேர்க்கை இருக்கும். மறுபுறம், மகர ராசியில் 4 கிரகங்களின் சேர்க்கையால் தனி கேதார யோகம் உருவாகும்.
இந்நிலையில், குறித்த கிரகங்கள் அனைத்தும் சேர்ந்து ஷட்கிரஹி யோகத்தை உருவாக்கும். ஷட்கிரஹி யோகத்தால் எந்தெந்த ராசிக்கு என்ன பலன் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
தற்போது மகர ராசியில் சனியும் வியாழனும் அமர்ந்துள்ளனர். கடந்த மாதம் ஜனவரியில் சூரியனும் சுக்கிரனும் மகர ராசியில் பிரவேசித்ததால் இந்த ராசியில் சதுர்கிரஹி யோகம் உருவாகிறது.
பெப்ரவரி 05-02-2022 ஆம் திகதி அன்று, புதன் தலைகீழ் இயக்கத்தில் இதில் நுழையும். இதைத் தொடர்ந்து பெப்ரவரி 09-02-2022 ஆம் திகதி சந்திரனும் மகர (Capricorn) ராசிக்குள் நுழைகிறார்.
இதனால் சூரியன், புதன், சுக்கிரன், வியாழன், சந்திரன் மற்றும் சனி ஆகியவை மகர ராசியில் ஒன்றாக இருக்கப் போகின்றன. இதன் காரணமாக இந்த ராசியில் ஷட்கிரஹி யோகம் உருவாகும். இது ஜோதிட சாஸ்திரத்தின் படி மிகவும் அரிதான நிகழ்வாகும்.
இந்த மூன்று ராசிக்காரர்களுக்கும் மிகவும் நல்ல நேரம்:
ஜோதிட வல்லுநர்களின் கூற்றுப்படி, மேஷம், ரிஷபம் மற்றும் மீன ராசிக்காரர்களுக்கு ஷட்கிரஹி யோகம் மிகவும் நல்லதாக இருக்கும். இந்த யோக பலன் மூலம் குறித்த ராசிக்காரர்கள் தொழில், பணம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுபட அதிக வாய்ப்புகள் உள்ளன.
இந்த மூன்று ராசிக்காரர்களும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்:
ஷட்கிரஹி யோகம் மிதுனம், தனுசு மற்றும் கும்ப ராசிக்காரர்களுக்கு சாதகமாக கருதப்படவில்லை. ஷட்கிரஹி யோகத்தால் ஆரோக்கியம் கெடலாம். மேலும், ஏதேனும் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. நிதி இழப்பும் ஏற்படலாம். ஆகையால் இந்த ராசிக்காரர்கள் இந்த நேரத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.