வைட்டமின்களை அதிகரிக்கச் செய்யும் தேன் மற்றும் வாழைப்பழம்
தேன் மற்றும் வாழைப்பழத்தை ஒன்றாக சேர்த்தால் அதில் வைட்டமின்களை அதிகரிக்கச் செய்கிறது.
வாழைப்பழ கூழில் உள்ள வைட்டமின் சி குளிர்கால சளி மற்றும் தொற்றுநோய்களை சமாளிக்க உதவுகிறது.
சத்துக்கள்
இது வயதான செயல்முறையை மெதுவாக்குவதோடு சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படுவதைத் தடுக்கிறது மற்றும் வைட்டமின் பி, மன அழுத்தம், தூக்கமின்மை, முடியில் ஏற்படும் சேதம் மற்றும் முகப்பரு ஆகியவற்றை சமாளிக்க உதவுகிறது.
இதிலுள்ள கரோட்டின் சத்துக்கள் புற்றுநோய் மற்றும் இருதய நோய்களிலிருந்து உடலைப் பாதுகாக்கிறது. வைட்டமின் ஈ சருமத்தை மிருதுவாக்கவும் மென்மையானதாகவும் மாற்றுகிறது மற்றும் மனநிலையையை மேம்படுத்துகிறது.
வாழைப்பழம் சாப்பிடுவதால் உடலில் பொட்டாசியம் பற்றாக்குறையை சமாளிக்கும். இதனால், உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதயத்தில் பிரச்சனை போன்றவை தவிர்க்கப்படும்.
பாதி வாழைப்பழத்தில் ஒரு தேக்கரண்டி தேன் மற்றும் வேகவைத்த ஓட்ஸ் மற்றும் கிரீம் ஒரு தேக்கரண்டி சேர்த்து அனைத்தையும் கலந்து முகத்தில் தடவி. 20 நிமிடங்கள் காத்திருந்து, வெதுவெதுப்பான நீரில் சருமத்தைக் கழுவி, கிரீம் தடவி வந்தால் வறண்ட சருமம் புதுணர்ச்சி அடைகிறது.