சித்தார்த் சுக்லாவின் புகைப்படத்தை பகிர்ந்த ஹொலிவூட் பிரபலம்! இணையத்தில் வைரல்
மறைந்த பிக்பாஸ் வின்னர் நடிகர் சித்தார்த் சுக்லாவின் (Sidharth Shukla) புகைப்படத்தை தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு மல்யுத்த வீரரும், ஹொலிவூட் நடிகருமான ஜோன் சீனா (John Cena)தனது இந்திய ரசிகர்களின் இதயங்களை வென்றுள்ளார் .
சித்தார்த் சுக்லா செப்டம்பர் 2 ஆம் திகதி மாரடைப்பால் மும்பையில் காலமானார். இதனையடுத்து சல்மான் கான், பிரியங்கா சோப்ரா, அக்ஷய் குமார் உட்பட பல பிரபலங்கள் சமூக வலைதளங்களில் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
இந் நிலையில் செப்டம்பர் 4 அன்று மல்யுத்த வீரர் ஜோன் சீனா (John Cena) சித்தார்த் சுக்லாவின் புகைப்படத்தைப் இன்ஸ்டாகிராம் பகிர்ந்துள்ள நிலையில் அது தற்போது வைரலாகியுள்ளது.
இதேவேளை முன்னதாக, 2020 ஆம் ஆண்டில் ஜோன் சீனா, பிக் பாஸ் 13 இணை போட்டியாளருமான அசிம் ரியாஸின் புகைப்படத்தையும் பகிர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.