திரைப்படமாக உருவாகும் ஈழத்தமிழர்களின் வரலாறு: இயக்குனர் யார் தெரியுமா?
ஈழத்திற்கும் – தென்னிந்திய தமிழ் சினிமாவிற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கின்றது, ஈழத்தில் போராட்டம் நடக்கும் போதே இங்கே மகேந்திரன், பாரதிராஜா, சீமான் போன்ற பல இயக்குனர்கள் வந்து சென்றுள்ளனர்.
அதேபோல் ஈழ மக்களின் வாழ்க்கையை தமிழக மக்களுக்கும், உலகிற்கும் எடுத்து சொல்லும் விதத்தில் பாலா இயக்கத்தில் நந்தா, மணிரத்தினம் இயக்கத்தில் கன்னத்தில் முத்தமிட்டால் போன்ற பல திரைப்படங்கள் உருவாகியுள்ளன.
அந்த வகையில் தனுஷை வைத்து ஆடுகளம் என்ற பல தேசிய விருதுகளை பெற வைத்த திரைப்படத்தையும், அசுரன் என்ற கருத்துள்ள திரைப்படத்தை 100 கோடி வசூலிக்க வைத்த இயக்குனர் வெற்றிமாறன் தற்போது பாவ கதைகள் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
இந்நிலையில் இயக்குனர் வெற்றிமாறன் அடுத்ததாக இலங்கை தமிழர் குறித்து திலீபன் என்ற திரைப்படத்தை இயக்கும் எண்ணமுள்ளதாக கூறியுள்ளார்.
அத்தோடு தமிழீழ விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் கதாபாத்திரத்தில் பிரபல சீரியல் நடிகர் ஸ்ரீதர் நடிக்கவுள்ளதாகவும், அவர் ஒரு ஊடகத்திற்கு வழங்கிய செவ்வியில் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.