கடகத்தில் இருக்கும் செவ்வாய் ; இந்த ராசிக்காரங்க ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும்
ஜோதிட நம்பிக்கைகளின்படி, செவ்வாய் மற்றும் சந்திரன் ஆகிய இரண்டின் தன்மையும் தாக்கமும் தனித்துவமானதாக கருதப்படுகின்றன. எனவே இந்த ராசிக்கு செவ்வாய் செல்வது சில ராசிக்காரர்களுக்கு ஏற்றத்தாழ்வுகளைக் கொண்டு வரக்கூடும். அதுவும் சரியாக முடிவெடுக்க முடியாமல் திணறக்கூடும்.
மொத்தத்தில் எந்த ஒரு காரியங்களையும் செய்வதாக இருந்தால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். முக்கியமாக பண விஷயத்தில் சிறப்பு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இப்போது கடக ராசியில் இருக்கும் செவ்வாயால் எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம்.

எந்த ராசிக்காரர்கள்
மேஷம்: மேஷ ராசியின் 4 ஆவது வீட்டில் செவ்வாய் உள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் சிரமங்களை சந்திக்க நேரிடும். இக்காலத்தில் அளவுக்கு அதிகமாக மற்றவர்களை நம்புவதைத் தவிர்க்க வேண்டும். வேலையில் அவசரப்படுவதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் இழப்புக்களை சந்திக்க நேரிடும். குறுக்குவழிகளைப் பின்பற்றுவதையோ அல்லது விதிகளை மீறுவதையோ தவிர்க்க வேண்டும். இல்லையெனில் பெரிய பிரச்சனையில் சிக்கி திணறுவீர்கள். திருமணத்தில் தடைகளை சந்திக்க நேரிடும். எந்தவொரு முக்கியமான முடிவையும் எடுப்பதற்கு முன், அதன் நன்மை தீமைகளைக் கருத்தில் கொள்ள வேண்டும். பணிபுரிபவர்கள் இக்காலத்தில் சிரமங்களால் வேலையை மாற்ற நினைக்கலாம்.
கடகம்: கடக ராசியின் முதல் வீட்டில் செவ்வாய் உள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் ஆரோக்கியத்தை புறக்கணிப்பதைத் தவிர்க்க வேண்டும். குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட முடியாமல் தடைகளை சந்திக்க நேரிடும். பணியிடத்தில் உடன் வேலை செய்வோருடன் போட்டி அதிகரிக்கும். நிதி விஷயங்களில் நன்கு சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். தேவையற்ற செலவுகளைத் தவிர்க்க வேண்டும். பண விஷயங்களில் அவசர முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். காதலித்து வந்தால், சிறு விஷயங்களால் தவறான புரிதல்கள் ஏற்படலாம்.
கன்னி: கன்னி ராசியின் 11 ஆவது வீட்டில் செவ்வாய் உள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் நல்ல நிதி ஆதாயங்களைப் பெற்றாலும், செலவுகள் அதிகரிக்கும். நிதி நிலையை சமநிலையில் பராமரிக்க செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும். நீதிமன்ற வழக்குகளால் சற்று அதிகமாக அலைய வேண்டியிருக்கும். எந்தவொரு செயலிலும் அவசரப்படுவதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் அது பெரிய இழப்பை ஏற்படுத்தும். குறுக்கு வழியில் எதையும் பெற முயற்சிக்காதீர்கள். எந்த வேலையையும் திட்டமிட்ட முறையில் செய்யுங்கள்.