கடற்படையினரின் அதிரடி நடவடிக்கை ; இலங்கை கடல் பகுதியில் ரூ.200 கோடி ஹெராயின் பறிமுதல்
இலங்கை கடல் பகுதியில் சுமார் ரூ. 200 கோடி மதிப்புள்ள ஹெராயின் போதைப்பொருள் இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆழ்கடல் மீன்பிடி படகில் மறைத்து கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இந்த போதைப்பொருள், கடற்படையினரின் வழக்கமான சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
உடனடியாக நடவடிக்கை எடுத்த கடற்படையினர் படகை நிறுத்தி சோதனை செய்ததில், பெருமளவிலான ஹெராயின் தொகுப்பு கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்த போதைப்பொருள் ராமேஸ்வரத்திலிருந்து கடல் வழியாக இலங்கைக்குள் கொண்டு வரப்பட இருந்ததாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய நபர்கள் குறித்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் மேலதிக பரிசோதனைக்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இலங்கை கடற்படை, கடல் வழியாக நடைபெறும் போதைப்பொருள் கடத்தலை தடுக்கும் நோக்கில் தொடர்ந்து தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.