கொழும்பில் கடும் வாகன நெரிசல்!
இன்று நாடளாவிய ரீதியில் அனைத்து அரச உத்தியோகத்தர்களும் பணிக்கு திரும்பியதையடுத்து, கொழும்பிலும் அதனை அண்மித்த பகுதிகளிலும் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது.
அத்தோடு, பாடசாலைகளும் இன்று மீள திறக்கப்பட்டதால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. இன்று முதல் அனைத்து அரச ஊழியர்களும் பணிக்குத் திரும்புவதை கட்டாயமாக்க அரசாங்கம் கடந்த வாரம் தீர்மானித்திருந்தது.
அதன்படி, பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அரச ஊழியர்களை பணிக்கு சமூகமளிக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டிருந்தது. பொருளாதாரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கொரோனா பாதிப்பால் நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.