ஹெல்மெட் அணியாமல் சென்றவரால் சோதனையில் காத்திருந்த ஷாக்
புத்தளம் நகரம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டு வந்த இருவர், 43 கிராம் 100 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் நேற்று (23) இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.
புத்தளம் மாவட்ட விசேட போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது, முல்லிபுரம் பகுதியில் ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளில் பயணித்த 38 வயதுடைய ஒருவரை வழிமறித்துச் சோதனையிட்டுள்ளனர்.

விசாரணை
இதன்போது, மோட்டார் சைக்கிளின் ஹேண்டில் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 18 கிராம் 700 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளும், 4,000 ரூபா பணமும் மீட்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில், அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இருவரும் அப்பகுதியின் முக்கிய போதைப்பொருள் விநியோகஸ்தர்களாகச் செயற்பட்டு வந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், போதைப்பொருள், மோட்டார் சைக்கிள் மற்றும் பணத்துடன் புத்தளம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.