திருகோணமலை மாவட்டத்தில் பலத்த மழை
கடந்த இரண்டு நாட்களாக திருகோணமலை மாவட்டத்தில் பலத்த மழை பெய்துவருகின்றது.
பலத்த மழையால் மூதூர் , மூதூர் கிழக்கு , வெருகல் , கிண்ணியா , குச்சவெளி , உட்பட பல பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக வெருகல் பிரதேசத்தில் வெருகல் , வட்டவான் , முத்துச்சேனை , ஆனைத்தீவு பகுதிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன.
11 ஆம் திகதி வரை மழை தொடரும்
வயல் நிலங்கள் கூட பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் திருகோணமலை கடல் கொந்தளிப்பாக காணப்படுவதால் திருகோணமலை மீனவர்களின் வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை இலங்கைக்கு கீழாக நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் தற்போது கிடைக்கும் மழை எதிர்வரும் 11 ஆம் திகதி வரை தொடரும் வாய்ப்புள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.