இந்த பிரச்சனை உள்ளவர்கள் மஞ்சள் உட்கொள்வதை தவிர்க்கவும்!
நாம் ஆரோக்கியத்திற்கு மஞ்சள் மிகவும் நன்மை பயக்கும் என்பதை நாம் அனைவரும் அறிவோம். இருப்பினும் சில நேரங்களில், மஞ்சள் நம் உடலுக்கு விஷம் போல் தீங்கு விளைவிக்கும்.
இந்நிலையில், நாம் எந்த சூழ்நிலையில் மஞ்சளை உட்கொள்ளலாம், எப்போதும் மஞ்சளை உட்கொள்ளக்கூடாது என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். எந்த நபர்கள் மஞ்சளை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என்பதை இந்த பதிவில் காணலாம்.
சர்க்கரை நோய் உள்ளவர்கள் : நீரிழிவு நோய்க்கு சிகிச்சை பெறுபவர்களுக்கு பொதுவாக இரத்தத்தை மெலிதாக வைத்திருக்கும் மருந்துகள் வழங்கப்படுகின்றன. இதனுடன் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவும் கட்டுப்படுத்தப்படுகிறது. அத்தகைய இந்நிலையில், இவர்கள் மஞ்சளை அதிக அளவில் பயன்படுத்துவது, இரத்தத்தின் அளவு மிகவும் குறைவதற்கு வாய்ப்புகள் உள்ளன. இது உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.
மஞ்சள் காமாலை பிரச்சனை உடையவர்கள்: மஞ்சள் காமாலை நோய் உள்ளவர்கள் மஞ்சள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். நோய் குணமான பிறகும், மருத்துவரின் ஆலோசனையைப் பெற்ற பிறகே மஞ்சளை உட்கொள்ளத் தொடங்க வேண்டும். இல்லையென்றால், உங்கள் உடல்நிலை மோசமாகிவிடும்.
சிறுநீரக கல் பிரச்சனை உடையவர்கள்: அடிக்கடி சிறுநீரக கல் பிரச்சனை ஏற்படும் நபர்கள், மருத்துவரின் ஆலோசனையின் பின்னரே மஞ்சளை உட்கொள்ள வேண்டும்.
இரத்தப்போக்கு பிரச்சனை உடையவர்கள் : திடீரென அல்லது தொடர்ந்து மூக்கில் இருந்து இரத்தப்போக்கு ஏற்படும் பிரச்சனை உள்ளவர்கள் மஞ்சளை குறைந்த அளவில் உட்கொள்ள வேண்டும். இதனுடன், வேறு ஏதேனும் இரத்தப்போக்கு பிரச்சனை அல்லது நோய் உள்ளவர்கள் மஞ்சளை உட்கொள்ளக்கூடாது. அல்லது மிகச் சிறிய அளவில் உட்கொள்ள வேண்டும். ஏனெனில் மஞ்சள் இரத்தம் உறைதல் செயல்முறையை குறைக்கிறது.