பாடசாலைகளுக்கான புதிய சுகாதார வழிகாட்டி வெளியானது
நாடு முழுவதும் எதிர்வரும் வாரம் முதல் பாடசாலைகளின் அனைத்து வகுப்புகளும் தொடங்க உள்ளன.
நாட்டில் உள்ள பாடசாலைகளின் அனைத்து வகுப்புகளுக்குமான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் வாரம் முதல் மீள தொடங்கவுள்ளதை அடுத்து பாடசாலைகளை நடத்தி செல்வது தொடர்பிலான புதிய சுகாதார வழிகாட்டி வெளியிடப்பட்டுள்ளதாக சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் வைத்தியர் டொக்டர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
பாடசாலை மாணவர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகும் பட்சத்தில், செயற்படும் விதம் தொடர்பாக புதிய சுகாதார வழிகாட்டியில் தெளிவூட்டல்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன், கொவிட் கொத்தணிகள் உருவாகும் என அச்சம் காணப்படுகின்ற பகுதிகளில் வாழும் மக்களுக்கு முன்னுரிமை வழங்கி, பூஸ்டர் தடுப்பூசியை செலுத்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும் சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.