இலங்கையில் ஆஸ்துமா பாதிப்பு குறித்து சுகாதாரப் பிரிவின் முக்கிய மருத்துவ அறிவிப்பு
இலங்கையில் ஆண்டுதோறும் நிகழும் மரணங்களில் சுமார் 6 சதவீதமானவை ஆஸ்துமா (Asthma) நோயினால் ஏற்படுவதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
தமிழர் பகுதியில் நேர்ந்த கொடூரம் ; பக்கத்துவீட்டுக்காரனால் விசேட தேவையுள்ள சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம்
சரியான சிகிச்சை மற்றும் மருத்துவ ஆலோசனைகளைப் பெறுவதன் மூலம் ஆஸ்துமா நோயை கட்டுப்படுத்தவும், பல சந்தர்ப்பங்களில் குணப்படுத்தவும் முடியும் என இலங்கை சுவாச நோய்கள் தொடர்பான விசேட வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் தலைவர், விசேட வைத்திய நிபுணர் சுமன ஹந்தகல தெரிவித்துள்ளார்.

கடந்த மே 5ஆம் திகதி அனுஷ்டிக்கப்பட்ட உலக ஆஸ்துமா தினத்தை முன்னிட்டு, சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, ஆஸ்துமா என்பது உலகளவில் பரவலாகக் காணப்படும் தொற்றாத நோயாகும். உலகளவில் சுமார் 260 மில்லியன் மக்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த நோய் குறிப்பாக சிறுவர்கள் மற்றும் இளைஞர்களிடையே அதிகமாகக் காணப்படுவதாகவும், உலகளவில் நாளொன்றுக்கு சுமார் 1000 பேர் ஆஸ்துமா காரணமாக உயிரிழப்பதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன எனவும் அவர் கூறினார்.
ஆஸ்துமா நோயை உரிய முறையில் கட்டுப்படுத்துவதன் மூலம் உயிரிழப்புகளை குறிப்பிடத்தக்க அளவில் குறைக்க முடியும் எனவும் சுகாதார நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.