இதெல்லாம் உங்கள் வீட்டில் இருந்தால் துரதிஷ்டம் ஏற்படுமாம் ; உடனே அகற்றி விடுங்கள்
இன்றும் வாஸ்து சாஸ்திரம் நமது வாழ்க்கையில் இரண்டற கலந்த ஒன்றாகத்தான் இருக்கிறது.
நாம் வசிக்கும் இல்லம் தொடங்கி நாம் வேலை செய்யும் அலுவலகம் படிக்கும் கல்லூரி என அனைத்திலும் வாஸ்து இருக்கிறது.

வாஸ்து சாஸ்திரப்படி, சில பொருட்களை நீங்கள் வீட்டில் வைத்திருந்தால் ஏழ்மையை ஏற்படுத்தும், பணத்தைத் துடைத்து விடும். உங்களிடம் செல்வம் சேர வேண்டுமென்றால் இந்த பொருட்களை எல்லாம் உங்கள் வீட்டிலிருந்து உடனே அகற்றி விடுங்கள்
புறாக்கூடு
வீட்டில் புறாக்கூடு வைத்திருந்தால் வீட்டில் நிலைப்புத்தன்மை இல்லாமல் போவதோடு தரித்திரமும் சேரும். உங்கள் வீட்டில் புறாக்கூடு இருந்தால் உடனே அதை அப்புறப்படுத்துங்கள்.

தேன்கூடு
தேன்கூடு உங்கள் வீட்டில் இருப்பது உங்களுக்கு ஆபத்தானது மட்டுமல்ல. வீட்டில் துரதிருஷ்டத்தையும் தரித்திரத்தையும் கொண்டு வரும். எனவே அதை வீட்டிலிருந்து நீக்க தொழில்முறை வல்லுநர்களை அணுகவும்.

சிலந்தி வலை
வீட்டில் சிலந்தி வலை கட்டினால் அது துரதிருஷ்டத்தின் அறிகுறி ஆகும். அதை உடனே நீக்கிவிட்டு வீட்டை முடிந்த வரை சுத்தமாக வைத்திருக்கவும்.

உடைந்த கண்ணாடி
வாஸ்துப்படி உடைந்த கண்ணாடிகள் துரதிருஷ்டமானது மட்டுமல்லாமல் வீட்டில் ஏழ்மையோடு எதிர்மறை ஆற்றலை ஈர்ப்பதாகக் கருதப்படுகிறது. வீட்டிலுள்ள எல்லா உடைந்த கண்ணாடி பொருட்களையும் தூக்கி எறியுங்கள்.

வௌவால்
வௌவால்கள் நோய்கள், துரதிருஷ்டமான சூழல்கள், ஏழ்மை மற்றும் மரணத்தைக் கூட கொண்டு வருவதாகக் கருதப்படுகிறது. வௌவால்கள் நடமாடும் இடத்தில் நீங்கள் குடியிருந்தால், சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு எல்லா ஜன்னல்கள் மற்றும் கதவுகளை அடைத்து விடவும்

சுவர்களில் பொத்தல்கள்
சுவர்களில் பொத்தல்கள் இருந்தால் உடனடியாக அதை பழுது பார்க்கவும். ஏனென்றால் சுவர்களில் இருக்கும் பள்ளங்கள் கண்களுக்கு சகிக்காமல் இருப்பதோடு நஷ்டத்தையும் ஏழ்மையையும் கொண்டு வரும்.
ஒழுகும் குழாய்கள்
ஒழுகும் குழாய்களால் தண்ணீர் வீணாவதோடு நேர்மறை ஆற்றல் வீட்டிலிருந்து வெளியேற்றப்படுகிறது. வீட்டில் ஒருவர் இறப்பதற்கான சகுனத்தை தரும் ஆகவே, ஒழுகும் குழாய்களை உடனடியாக பழுது பார்க்கவும்.

வாடிய மலர்கள்
கடவுளுக்கு தினமும் பூஜை செய்யும்போது, வாடிய மலர்களை கடவுள் படங்களுக்கு போடுவதோ அர்ச்சனைக்குப் பயன்படுத்துவதோ கூடாது. பூஜை செய்வதற்கு முன் உங்கள் பூஜை அறையை சுத்தம் செய்யுங்கள். வாடிய மலர்களை வைத்திருப்பது ஏழ்மையைக் கொண்டு சேர்க்கும்.
