100 குழந்தைகள் வேண்டும்; நெட்டிசன்களை வாய்பிளக்கவைத்த ரோமியோ!
உகாண்டா நாட்டைச் சேர்ந்த ஆண் ஒருவர் ஏழு பெண்களைத் திருமணம் செய்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ள சம்பவம் நெட்டிசன்களை வாய்பிளக்கவைத்துள்ளது.
மத்திய உகாண்டாவின் முகோனோ மாவட்டத்தில் வசிக்கும் அந்த ஆணின் பெயர் ஹபீப் என்சிகோன்னே. ஹபீப் கடந்த ஞாயிற்றுக்கிழமை (செப். 10) ஏழு பெண்களை மணந்துள்ள நிலையில் 100 குழந்தைகளுக்கு தந்தையாவதே அவரது ஆசை என கூறப்படுகின்றது.
ஆடம்பரமான திருமணம்
ஒவ்வொரு மணப்பெண்ணின் வீட்டிலும் நடத்தப்படும் ஆடம்பரமான பாரம்பரிய திருமண முறைப்படி தனித்தனியே ,ஒரே நாளில் ஹபீப் ஏழு பெண்களை மணந்துகொண்டார்.
உள்ளூர் ஊடகங்கள் , ஹபீப் மிகவும் பணக்காரர் என கூறியுள்ளது. ஹபீப் அனைத்து மனைவிகளையும் தனித்தனியாக அவர்களது வீட்டில் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.
அவர் தனது ஏழு மனைவிகள் மற்றும் அவர்களது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை அன்றே தனது வீட்டில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வரவேற்பு நிகழ்ச்சியின் மூலம் தனது வாழ்க்கைத் துணைவர்கள் அனைவரையும் அழைத்துச் சென்றார்.
மணமக்கள் மற்றும் அவர்களின் பெற்றோருக்கு பரிசுகள்
மணமக்கள் மற்றும் அவர்களின் பெற்றோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. திருமண விழாவில் மணமகள்களுக்கு அனைவருக்கும் புதிய கார்களை பரிசாக வழங்கியுள்ளார்.
இதைத் தொடர்ந்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. விழாவில் கலந்து கொள்ள ஹபீப்பின் மனைவிகள் வாகன அணிவகுப்பில் வீட்டிற்கு வந்தனர்.
இதில் 40 லிமோக்கள் மற்றும் 30 மோட்டார் சைக்கிள்கள் அடங்குமாம். வரவேற்பை பார்த்து விழாவிற்கு வந்திருந்த விருந்தினர்களும் இதனால் மிகவும் ஆச்சரியமடைந்ததாக கூறப்படுகிறது.
100 குழந்தைகளுக்கு தந்தையாகும் ஆசை,
பெரும்பாலானோருக்கு 7 பேரை ஒரேநாளில் மணந்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருந்தாலும் , உகாண்டாவில் பலதார மணம் சட்டப்பூர்வமாக உள்ளது. அதேவேளை ஏழு பெண்களை திருமணம் செய்த பிறகும், ஹபீப் இன்னும் அதிகமாக திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார் என்றும் கூறப்படுகிறது.
ஏனெனில் அவர் 100 குழந்தைகளுக்கு தந்தையாக வேண்டும் என்பது ஆசை எனவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து ஹபீப் கூறுகையில் ,
தனது மனைவிகள் ஒருவருக்கொருவர் பொறாமை கொள்ளவில்லை என கூறிய அவர், அதனால்தான் ஹபீப் ஏழு பேரையும் ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொண்டாராம். '
ஒரு பெரிய மற்றும் மகிழ்ச்சியான குடும்பத்தை உருவாக்க, நான் அனைவரையும் ஒரே நாளில் திருமணம் செய்துகொண்டேன் எனவும் பெருமிதமாக கூறியுள்ளராம் 7 பெண்களை மணந்த ரோமியோ ஹபீப்.
அதேவேளை ஹபீப் திருமணம் செய்த 7 பெண்கள் இருவர் சகோதரிகள் என்றும் கூறப்படுகின்றது.