பஸ் சக்கரத்தில் சிக்குண்ட இளம் குடும்பஸ்தருக்கு நேர்ந்த கதி!
நுவரெலியா – ஹட்டன் நகர பிரதான வீதியில் பஸ்ஸின் சக்கரத்தில் சிக்குண்ட இளம் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகியுள்ளார்.
இந்த விபத்து சம்பவம் ஹட்டன் மக்கள் வங்கிக்கருகில் நேற்று மதியம் இடம்பெற்றது.
விக்கடனிலிருந்து ஹட்டன் நோக்கி வந்த தனியார் பயணிகள் பஸ்ஸில் மோதுண்டு விழுந்த இளைஞன் பஸ்ஸின் பின் சக்கரத்தில் சிக்குண்டு பலியாகியுள்ளார்.
இந்நிலையில் உயிரிழந்த இளைஞனின் சடலம் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளதுடன் பஸ்ஸின் சாரதி ஹட்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் நோர்வூட்டை சேர்ந்த குபேரன் கருணாகரன் (28-வயது) என இளம் குடும்பஸ்தர் பலியானதுடன் பெண் ஒருவரும் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.