ஹட்டனில் மூவரின் உயிரை பறித்த பேருந்து சாரதிக்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு!
ஹட்டன் - மல்லியப்பு பகுதியில் இடம்பெற்ற தனியார் பேருந்து விபத்தில் காயமடைந்து டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பேருந்தின் சாரதியை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிடப்பட்டுள்ளது.
இன்றையதினம் (22-12-2024) வைத்தியசாலைக்கு சென்ற ஹட்டன் நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் எஸ். ராம்மூர்த்தி, சந்தேகநபரான சாரதியின் நிலை தொடர்பில் வைத்தியர்களிடம் கேட்டறிந்து இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இதன்படி, சந்தேகநபர் தற்போது சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
நேற்றையதினம் (21-12-2024) காலை ஹட்டனில் இருந்து கண்டி நோக்கி பயணித்த இந்த பேருந்து மல்லியப்பு பகுதியில் விபத்துக்குள்ளானது குறிப்பிட்டத்தக்கது.
இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்த நிலையில் 50 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.