உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிந்ததா?
தற்போது நடைபெற்று வரும் கல்விப் பொதுத் தராதர பத்திர உயர்தரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள் கசிந்துள்ளதாக சமூக ஊடகங்களில் பரவும் விடயங்கள் தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இன்று (25) இடம்பெறும் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அமைச்சர் நளின் ஜயதிஸ்ஸ இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றின் அடிப்படையில் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
பொருளியல் பரீட்சை இடம்பெறுவதற்கு முன்னர் ஊகங்களின் அடிப்படையில் வினாக்கள் வழங்கப்பட்டதன் காரணமாக குறித்த பரீட்சையின் வினாத்தாள் கசிந்துவிட்டதாக சமூக ஊடகங்களில் பல்வேறு கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.
இது தொடர்பாக சில ஆசிரியர் தொழிற்சங்கங்களும் ஊடகங்களுக்கு பல கருத்துக்களை வௌியிட்டிருந்த நிலையில் தற்போது அது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கபப்ட்டுள்ளது.