புதிய அமைச்சரவையில் பிரதமராக ஹரிணி அமரசூரிய பதவிப் பிரமாணம்

Sri Lanka Parliament Anura Kumara Dissanayaka Prime minister Sri Lanka Harini Amarasuriya
By Sahana Sep 24, 2024 07:43 AM GMT
Sahana

Sahana

Report

பு்திய அரசாங்கத்தில் பிரதமராக திருமதி ஹரிணி அமரசூரிய பதவிப் பிரமாணம் செய்து கொள்வதாகவும், அமைச்சர்களாக விஜித ஹேரத் மற்றும் லக்ஸ்மன் நிபுன ஆராச்சி ஆகியோர் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக அநுர குமாரதிஸாநாயக்க நேற்றையதினம் பதவியேற்றுள்ள நிலையில், புதிய அமைச்சரவை பதவிப் பிரமாணம் இன்று(24) இடம்பெறலாம் என கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் டொலரின் பெறுமதி ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கையில் டொலரின் பெறுமதி ஏற்பட்டுள்ள மாற்றம்

அதேவேளை, நாட்டின் ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க தெரிவு செய்யப்பட்டதையடுத்து வெற்றிடமாகவுள்ள பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு லக்ஷ்மன் நிபுணரச்சியின் பெயரை தேர்தல்கள் ஆணைக்குழு வர்த்தமானி மூலம் அறிவித்தது.

புதிய அமைச்சரவையில் பிரதமராக ஹரிணி அமரசூரிய பதவிப் பிரமாணம் | Harin Prime Minister In The New Cabinet

அதன்படி அவர் அமைச்சரவை அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துகொள்ளலாம் எனவும் கூறப்படுகின்றது.

அதாவது,நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப் பிரமாணம் செய்யாமலேயே அமைச்சராக பணியாற்றும் தகுதி அரசியல் சாசனத்தால் வழங்கப்பட்டுள்ளதாக சட்ட நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறானதொரு பின்னணியில் இன்று (24) பிற்பகல் புதிய அமைச்சரவையை நியமிக்க ஜனாதிபதி அநுர குமாரதிஸாநாயக்க திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.

புதிய அமைச்சரவையில் பிரதமராக ஹரிணி அமரசூரிய பதவிப் பிரமாணம் | Harin Prime Minister In The New Cabinet

பிரதமராக கலாநிதி ஹரிணி அமரசூரிய பதவிப் பிரமாணம் செய்யவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி 15 அமைச்சுக்களின் பொறுப்புகள் ஜனாதிபதி உட்பட நான்கு பேருக்கும் தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட உள்ளது.

உரிய நியமனங்களை மேற்கொண்டு இன்று (24) இரவு பாராளுமன்றத்தை கலைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பாராளுமன்றம் கலைக்கப்பட்டதை அறிவிக்கும் வர்த்தமானியில் பொதுத் தேர்தல் வேட்புமனு தாக்கல் காலம் மற்றும் வாக்குப்பதிவு திகதி என்பன குறிப்பிடப்படும்.

அதேவேளை, பாராளுமன்றம் கலைக்கப்பட்ட நாளிலிருந்து 52 முதல் 66 நாட்களுக்குள் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் கட்டுப்பணம் இழந்த ஜனாதிபதி வேட்பாளர்கள்

ஜனாதிபதி தேர்தலில் கட்டுப்பணம் இழந்த ஜனாதிபதி வேட்பாளர்கள்

மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US