கிரிக்கெட் தொடர்பில் பொய் சொன்ன சமூக ஊடக குழு ; எச்சரிக்கை விடுத்த ஹரின் பெர்னாண்டோ
விளையாட்டுத்துறையில் ஊழலை தடுப்பதற்காகவே தான் சட்டத்தை கொண்டு வந்ததாகவும், அதனை அறியாதவர்கள் தன்னையும் சனத் ஜயசூரியவையும் குற்றம் சுமத்தி வருவதாக விளையாட்டு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
புதிய நிகழ்நிலை சட்டம்
2019 நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் சூதாட்டத்தில் ஈடுபடும் எவரும் விளையாட்டுக்கு வருவதை தடுக்கும் சட்டத்தை கொண்டு வந்ததாக அமைச்சர் கூறுகிறார்.
அத்துடன் இலங்கையில் மாத்திரம் இருக்கின்ற சட்டம் இருப்பது பெரும் பலம் எனவும் இதனை அறியாத சிலர் பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதாகவும் அமைச்சர் கூறுகிறார்.
இதன் காரணமாக வழக்கறிஞர்களுடன் இணைந்து புதிய நிகழ்நிலை சட்டத்தின் மூலம் பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்திய அனைவருக்கும் எதிராக வழக்குப் பதிவு செய்ததாக அவர் கூறுகிறார்.
மேலும், குற்றம் சாட்டுபவர்கள் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க வேண்டும், இல்லையெனில் அவர்களின் சமூக ஊடக கணக்குகளை கூட தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கூறுகிறார்.