விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ள இலங்கை காவல்துறை!
ஹர்த்தால் பிரச்சாரம் தொடர்பாக இலங்கை காவல்துறை விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இலங்கையில் நாளைய தினம் (மே 6 ஆம் திகதி) நாடளாவிய ரீதியில் பல்வேறு போராட்டங்கள் மற்றும் ஹர்த்தால் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹர்த்தாலில் ஈடுபட விரும்பாத வர்த்தகர்களை சில குழுக்கள் அச்சுறுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சில குழுக்கள் தமது தொழில்களை திறக்கக் கூடாது என பல்வேறு அழுத்தங்களை பிரயோகித்து வருவதாகவும் தெரியவந்துள்ளது.
அரசியலமைப்பின் மூலம் பொதுமக்களுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள உரிமைகளை இலங்கை காவல்துறை மதிக்கிறது.
எவ்வாறாயினும், அடிப்படை உரிமைகளை அனுபவிப்போம் என்ற போர்வையில் தொழில்களுக்கு இடையூறு விளைவிப்பவர்கள் மீது குற்றவியல் சட்டத்தின் கீழ் நேரடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.