பிரபல குற்றவாளி ஹரக் கட்டாவின் ஆதரவாளர் தப்பிச் சென்ற வேன் மீட்பு!
இலங்கையில் தடுப்புக்காவலில் உள்ள ஹரக் கட்டா தப்பிச் செல்வதற்காக குறித்த வேன் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு முன்பாக நிறுத்தப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.
இதேவேளை, அவருக்கு தப்பிச்செல்ல உதவியதாக கூறப்படும் குறித்த உத்தியோகத்தர் தற்போது வெளிநாடு சென்றுள்ளார் என விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
இருப்பினும், அவர் விமான நிலையங்களின் ஊடாக வெளிநாடு செல்லவில்லை என குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.
குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் கடந்த ஜனவரி மாதம் கடவுச்சீட்டை தயார் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த பொலிஸ் கான்ஸ்டபிளின் தாயாரிடம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் நேற்று வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
கடந்த 10 ஆம் திகதி ஹரக் கட்டா, அவருக்கு பாதுகாப்பில் இருந்த பொலிஸ் விசேட அதிரடிப்படையின் உப பொலிஸ் பரிசோதகரின் துப்பாக்கியை பறிக்க முயன்றுள்ளார்.