பாண்டியன் ஸ்டோர்ஸ் சித்ராவின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்!
சீரியல் நடிகை சித்ரா நடித்த”Calls”திரைப்படம் விரைவில் கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மறைந்த சீரியல் நடிகை சித்ரா தொலைக்காட்சி தொகுப்பாளினியாக தனது பயணத்தை ஆரம்பித்த இவர் பின்னர் சின்னத்திரை நட்சத்திரமாக வலம் வந்தார்.
இறுதியாக இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற தொடரில் முல்லை என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் பலரின் மனதைக் கவர்ந்தார். திடீரென ஒரு நாள் சித்ரா தற்கொலை செய்து கொண்ட செய்தியைக் கேட்ட அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இந்நிலையில் சித்ரா நடித்த”Calls”திரைப்படம் விரைவில் கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பாக உள்ள நிலையில் சித்திராவின் ரசிகர்கள் ஆவாலாக படத்தை பார்க்க காத்திருக்கின்றனர். எனினும் Calls”திரைப்படம் எப்போது ஒலிபரப்பட்டும் என்ற திகதி, நேரம் போன்ற விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.
