முல்லைத்தீவு விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான தகவல்!
முல்லைத்தீவில் அறுவடை ஆரம்பமாகி நடைபெற்றுவரும் நிலையில் விவசாயிகளுக்கான எரிபொருள் வழங்கும் நடவடிக்கை முள்ளியவளை லங்கா I.O.C எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் இடம்பெற்று வருகின்றது.
குறித்த லங்கா I.O.C எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் விமானப்படையின் பூரண பாதுகாப்பில், மாவட்ட செயலக ஊழியர்கள், கிராம அலுவலர்கள், எரிபொருள் நிரப்பும் நிலைய பணியாளர்கள் இணைந்து முள்ளியவளை பிரதேசத்தை சேர்ந்த விவசாயிகளுக்கு அரிவி வெட்டுவதற்காக ஏக்கருக்கு தலா பத்து லீற்றர் வீதம் டீசல் வழங்கப்பட்டது.
மேலும் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 12 கிராம அலுவலர் பிரிவுகளை சேர்ந்த மக்களுக்கு பெற்றோலும் விநியோகிக்கப்பட்டது.
விவசாயிகளின் நன்மை கருதி முதன்மையடிப்படையில் எரிபொருட்களை துறைசார் உத்தியோகத்தர்களின் கண்காணிப்பில் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.