விவசாயிகளுக்கு ஜனாதிபதி வெளியிட்ட மகிழ்ச்சி தகவல்
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட நெல், தானியங்கள் மற்றும் சோளம் போன்றவற்றுக்கு ஹெக்டெயாருக்கு 1,50,000 உதவித்தொகை வழங்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார இதனைத் தெரிவித்தார்.

நிவாரணம்
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
சுமார் 1,60,000 ஹெக்டெயார் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக, ஒரு மாதத்திற்கும் குறைவான பயிருக்கு ஹெக்டெயாருக்கு 40,000 மட்டுமே வழங்கப்படும். இந்த 1,60,000 ஹெக்டெயார்களையும் மீண்டும் பயிரிட முடிவு செய்துள்ளோம். அதற்காக விவசாயிகளுக்கு தேவையான நிவாரணத்தை வழங்குவோம்.
மேலும், இதுபோன்ற ஒரு அனர்த்தத்தில், நாங்கள் பொதுவாக மரக்கறிகளைப் பற்றி யோசிப்பதில்லை. மரக்கறி விளைச்சலுக்கு ஹெக்டெயாருக்கு ரூ. 2 இலட்சம் உதவித்தொகை வழங்கப்படும்.
இந்த பணம் இன்று முதல் ஒதுக்கப்படும். ஆனால் எங்கள் அமைச்சின் அதிகாரிகள் மீண்டும் பயிரிடுவதில் கவனம் செலுத்த வேண்டும். இந்த வீழ்ச்சி அடைந்த பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதே எமது எதிர்பார்ப்பு.
விவசாயிகள் மீண்டும் பயிர்ச்செய்கையைத் தொடங்க வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். அதற்காக அவர்களைத் தயார்படுத்துமாறு அதிகாரிகளைக் கேட்டுக்கொள்கிறோம்.