நகைப்பிரியர்கள் ஹேப்பி; அதிரடியாக குறைந்த தங்கவிலை!
மே மாதம் தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்த நிலையில் ஜூன் மாத தொடக்கத்தில் இருந்தே கணிசமாக குறைந்து வருகின்றமை நகைப்பிரியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் தங்கம் விலை நேற்று முன்தினம் சவரனுக்கு ரூ.464 குறைந்த நிலையில் இன்று மீண்டும் அதிரடியாக குறைந்துள்ளது.
இன்றைய தங்கவிலை
அதன்படி, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் 5,570 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ. 80 குறைந்து ஒரு சவரன் ரூ.44,560 ஆகவும் விற்பனையாகிறது.
18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.8 குறைந்து ஒரு கிராம் 4,563 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ.64 குறைந்து ஒரு சவரன் ரூ. 36,504 ஆகவும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை
அதேவேளை வெள்ளி விலை கிராமுக்கு 10 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.77.70 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.77,700 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.