பேய் விரட்டிய சாமியார் உள்ளிட்ட 10 பேருக்கு நேர்ந்த கதி!
நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள கொரோனா தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறி, வீடொன்றில் `பேய் விரட்டும்` சடங்குகளை செய்த சாமியார் உள்ளிட்ட 10 பேர், பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் அம்பாறை - மாயாதுன்ன பிரதேசத்திலேயே இடம்பெற்றுள்ளது. பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய, திடீர் சுற்றிவளைப்பு மேற்கொண்டபோதே அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களுக்கு பொலிஸார் பிணை வழங்கியுள்ளதுடன் சாமியார் உள்ளிட்ட 10 பேரும் பொதுச் சுகாதாரப் பரிசோதகரால் 14 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் தனிமைப்படுத்தலை நிறைவு செய்த பின்னர், அவர்களுக்கு எதிராக அம்பாறை நீதிமன்றில் வழக்குத் தொடரப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.