கைவிலங்குடன் நபர் ஒருவர் தப்பி ஓட்டம்
வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு ஒன்றை தன்னிடம் வைத்திருந்தமை தொடர்பில் சந்தேகத்தில் நபர் ஒருவர் மித்தெனிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் தடுப்பில் வைக்கப்பட்டிருந்த அந் நபர் கைவிலங்குடன் தப்பிச் சென்றுள்ளதாக மித்தெனிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தப்பியோடிய நபர்
தப்பியோடிய நபர் மித்தெனிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெபொக்காவ மேற்கு பிரதேசத்தில் வசிப்பவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 27ஆம் திகதி பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகள் குழுவொன்று கைக்குண்டுடன் இவரை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் பின்னர் நீதிமன்றில் பெறப்பட்ட தடுப்புக்காவல் உத்தரவின் பேரில் சந்தேக நபர் மித்தெனிய பொலிஸ் தடுப்பில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இவர் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.