முடி உதிர்வு பிரச்சனையா? கவலையை விடுங்க! இதை மட்டும் பயன்படுத்துங்க போதும்
இன்றைய காலகட்டத்தில் முடி உதிரும் பிரச்சனை அனைவருக்கும் உள்ள ஒரு பொதுவான பிரச்சனையாக உள்ளது. நீங்களும் இந்த பிரச்சனையால் அவதிப்பட்டுக்கொண்டு இருந்தால், இது உங்களுக்கான பதிவாகும்.
பெரும்பாலான மக்கள் கூந்தலின் அழகை அதிகரிக்க ரசாயனம் நிறைந்த பொருட்களை அதிகம் பயன்படுத்துகிறார்கள். ஆனால், பல இயற்கையான பொருட்களைக் கொண்டே இதை செய்ய முடியும். இவை பல வித பலன்களை அளிக்கும்.
உதிர்ந்த முடியை மீண்டும் பெற கடுகு எண்ணெய் மற்றும் கடுகு பொடியை பயன்படுத்தலாம். இது உங்கள் தலைமுடியை மீட்டெடுக்க உதவுவது மட்டுமல்லாமல், உங்கள் சருமத்திற்கும் நன்மை பயக்கும் என்று நம்பப்படுகிறது.
கூந்தல் வளர்ச்சியுடன் பொடுகு பிரச்சனைக்கும் தீர்வு : கடுகு பவுடர் கால்நடை தீவனத்திலும் பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிட்டத்தக்கது. கடுகு பொடி பொடுகுத் தொல்லை முதல் முடி வளர்ச்சி வரையிலான பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைகிறது. இதைப் பயன்படுத்துவதன் மூலம், உங்கள் தலைமுடியை நீளமாக்குவது மட்டுமல்லாமல், அடர்த்தியாகவும் மாற்றலாம்.
கூந்தலின் அழகை மீட்டெடுக்க பயனுள்ளதாக இருக்கும்: கடுகு எண்ணெய் மற்றும் கடுகு கொண்டு செய்யப்படும் பொடி ஆகியவை கூந்தல் பராமரிப்பில் பல விதத்தில் பயன் தருகின்றன.
கடுகு பொடி பார்ப்பதற்கு விசித்திரமாகத் தோன்றினாலும், இழந்த முடியின் அழகை மீட்டெடுக்க இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதாவது, கடுகு எண்ணெய் / கடுகு பொடியை பயன்படுத்தி, உதிர்ந்த முடியை மீண்டும் பெறலாம்.
கடுகு பொடி எப்படி செய்வது? கடுகு பொடி பல வழிகளில் வேலை செய்கிறது. ஹேர் மாஸ்க் தவிர, இது ஹேர் ஸ்க்ரப்பாகவும் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு கடுகை லேசாக காய வைத்து, பின்னர் மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ளவும். அதன் பிறகு, இந்த பொடியை காற்று புகாத டப்பாவில் நிரப்பி வைக்கவும். ஹேர் மாஸ்க், ஹேர் பேக், ஃபேஸ் பேக் போன்றவற்றுக்கு இதைப் பயன்படுத்தலாம்.