வேண்டாம் என்று தலைதெறிக்க ஓடிய ஹாபிஸ் நஸீர்
அரசியலே வேண்டாம் என்ற நிலைக்கு இன்று தாம் தள்ளப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர், தாம், மூவின மக்களுக்கும் இனபேதமின்றி செயற்பட்டபோதும் தமது அலுவலகம் எரியூட்டப்பட்டதாக குறிப்பிட்டார்.
தாம் மக்களுக்கு சேவை செய்தபோதும், எவ்வித தனிப்பட்ட பயன்களையும் பெறவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
கடந்த அமைச்சரவையில் 17 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்களாக பதவியேற்றுள்ள நிலையில், சுற்றுச் சூழல் அமைச்சுப் பொறுப்பேற்றுள்ள முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் நசீர் அஹமட் என்பவருக்கு எதிராக அவரின் கட்சி போர்க்கொடி தூக்கியுள்ளது.
"ஹாபிஸ் நஸீர் அஹமட் தன்னை ஓர் அவமானச் சின்னமாக மாற்றிக் கொண்டுள்ளார்" என முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் தெரிவித்திருந்த சூழ்நிலையில் இன்று நாடாளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நஸீர் அஹமட் மேற்குறித்த தகவலை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நஸீர் அஹமட் ஒரு வாரம் அமைச்சராக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
