இலங்கையை அதிர வைத்த ஒற்றை நபர் ; பல மில்லியன் டொலர் அரச நிதியை சுருட்டிய ஹெக்கர்
Sri Lanka
Crime
Dollars
Nalinda Jayatissa
By Vironika
அமெரிக்க டொலர் 22.9 மில்லியன் கடனைச் செலுத்த வேண்டியிருந்த ஒரு நாட்டிற்கு, கடன் தவணையாக திறைசேரியினால் செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் டொலர் தொகை, கணினி ஹெக்கர் ஒருவருக்குச் சென்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
நேற்று (22) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இது தொடர்பாக ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்குப் பதிலளித்த அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ, இது தொடர்பான விடயங்களை உள்ளடக்கி சபாநாயகருக்குக் கடிதம் ஒன்றைச் சமர்ப்பித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
அதற்கமைய, இது குறித்து ஆராய்ந்து விசாரணைகளை முன்னெடுப்பதா இல்லையா என்பது குறித்து சபாநாயகர் தீர்மானம் எடுப்பார் என்றும் அவர் தெரிவித்தார்.
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US