யாழில் நாகப்பாம்பை கைகளால் பிடித்த குருக்கள் ; இறுதியில் நேர்ந்த சோக சம்பவம்
யாழ்ப்பாணத்தில், குருக்கள் ஒருவர் நாக பாம்பினை கைகளால் பிடித்தபோது அந்த பாம்பு தீண்டியதில் உயிரிழந்துள்ளார்.
இதன்போது புதன்கிழமை (02) அன்று புத்தூர், சிவன்கோவில் வீதியைச் சேர்ந்த என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வலையில் சிக்கிய நாகபாம்பு
குறித்த குருக்கள் அராலி பகுதியில் உள்ள வாலையம்மன் கோவிலில் பூஜை செய்து வந்துள்ளார். கடந்த திங்கட்கிழமை (31) இரவு பூஜையை முடித்துவிட்டு கோவிலுக்கு அருகேயுள்ள வீட்டிற்கு சென்று முற்றத்தில் இருந்துள்ளார்.
இதன்போது அங்கு வலையில் சிக்கியிருந்த நாகபாம்பை கைகளால் பிடித்துள்ளார். இதன்போது பாம்பு அவரை தீண்டியுள்ளது.
இந்நிலையில் வீட்டில் உள்ளவர்களை அழைத்து போத்தல் ஒன்றினை வாங்கி பாம்பினை போத்தலினுள்ளே விட்டுவிட்டு, தன்னை பாம்பு தீண்டிய விடயத்தை கூறிவிட்டு அதன் விசத்தை இல்லாது செய்யவும் தனக்கு தெரியும் என கூறியுள்ளார்.
இருப்பினும் அவர்களின் வற்புறுத்தலினால் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார்.