குருநாகல் கடற்கரையில் இறந்த நிலையில் கரையொதுங்கும் மீன்கள்
குருநாகல் கடற்கரையில் நூற்றுக்கணக்கான இறந்த மீன்கள் கரை ஒதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாளாந்தம் சுமார் 200 மீன்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்குவதாக அப்பகுதியின் குடியிருப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் சிலர் இறந்த மீன்களை சேகரித்து சந்தைகளில் விற்கின்றனர்.
இந்நிகழ்வு கடந்த ஒரு வாரமாக நிகழ்ந்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். சாதாரணமாக இறந்த மீன்கள் 2-3 கூடைகள் நாளாந்தம் சேகரிக்கப்படுகின்றது. மேலும் இந்த இறந்த மீன்கள் அனைத்தும் ஒரே மாதிரியானவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குருநாகல் மாநகர சபை ஊழியர்களால் இறந்த மீன்கள் தினசரி சேகரிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
கடற்கரையில் உள்ள மீன்களின் அடர்த்தி மற்றும் கடற்கைரையிலுள்ள பாசிகள் காரணமாக மீன்களின் இறப்புகள் அதிகரித்து வருவதாக ஆய்வக அறிக்கைகளின் ஊடக கண்டறியப்பட்டுள்ளது.