குரு-புதன் கேந்திர யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள்
வேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் அவ்வப்போது ராசியை மாற்றி, சுப மற்றும் ராஜயோகங்களை உருவாக்கி, மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்த வகையில் பெப்ரவரி 21 ஆம் திகதி கிரகங்களின் இளவரசனாக கருதப்படும் புதனும், குருவான குருபகவானும் மிகவும் சக்தி வாய்ந்த கேந்திர யோகத்தை உருவாக்கவுள்ளனர்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் கேந்திர யோகத்தால் வருமானத்தில் உயர்வு ஏற்படும். வேலை மற்றும் வணிகத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். ஏற்கனவே முதலீடுகளை செய்திருந்தால், அதிலிருந்து நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. தொழிலதிபர்கள் எதிர்பாராத அளவில் லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். பங்குச் சந்தை, லாட்டரி போன்றவற்றில் இருந்து நிறைய லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு கேந்திர யோகத்தால் நீண்ட நாட்களாக சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைப்பதால், ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றி கிடைக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் மற்றும் தம்பதிகளிடையே பிணைப்பு அதிகரிக்கும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் முதலீடுகளில் இருந்து நிறைய லாபம் கிடைக்கும். மாணவர்களுக்கு உயர்கல்வியைத் தொடங்க வாய்ப்பு கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும். மொத்தத்தில் இதுவரை வாழ்க்கையில் சந்தித்து வந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு கேந்திர யோகத்தால் தைரியமும், துணிச்சலும் அதிகரிக்கும். நீண்ட நாள் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. திடீர் நிதி ஆதாயங்களைப் பெறுவதற்கான வாய்ப்பும் உள்ளது. நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். முக்கியமாக ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றி கிடைக்கும்.