56 ஆண்டுகளுக்கு பின் குரு பூர்ணிமா நாளில் உருவாகும் ராஜயோகங்கள் ; சுப செய்தி காத்திருக்கும் ராசிகள் இவர்கள் தான்
வேத நாட்காட்டியின் படி, இந்த ஆண்டின் குரு பூர்ணிமா ஜூலை 29 ஆம் திகதி வருகிறது. ஜோதிடத்தின் படி, இந்த குரு பூர்ணிமா மிகவும் சிறப்பு வாய்ந்தது. குறிப்பாக இந்நாளில் சூரியனும், புதனும் சேர்ந்து புதாதித்ய ராஜயோகத்தை உருவாக்குகின்றன.
அதோடு குரு பகவான் தனது உச்ச ராசியான கடக ராசியில் இருப்பதால் ஹன்ஸ் ராஜயோகம் உருவாகியுள்ளது. அதுமட்டுமின்றி, சனியின் நிலையால் சச ராஜயோகமும் உருவாகியுள்ளது. இப்படி இந்த 3 ராஜயோகங்களும் குரு பூர்ணிமா நாளில் சுமார் 56 ஆண்டுகளுக்கு பின் உருவாகிறது.

அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள்
ரிஷபம் : குரு பூர்ணிமா நாளில் உருவாகும் 3 ராஜயோகங்களால் ரிஷப ராசிக்காரர்களின் திட்டமிட்ட வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். தொழிலதிபர்களுக்கு முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும். புதிய முதலீடுகளை செய்ய திட்டமிட்டிருந்தால், இக்காலம் சாதகமாக இருக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளிடம் நல்ல பாராட்டுக்களைப் பெறுவீர்கள். சிலருக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது.
கும்பம்: குரு பூர்ணிமா நாளில் உருவாகும் 3 ராஜயோகங்களால் கும்ப ராசிக்காரர்களின் வேலையில் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். பெரியவர்களின் ஆலோசனையை கேட்டு நடந்தால், பெரிய வெற்றியைக் காணலாம். வருமானத்தில் இருந்த தடைகள் நீங்கி, பல புதிய வழிகளில் இருந்து பண வரவு அதிகரிக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.
மகரம் : குரு பூர்ணிமா நாளில் உருவாகும் 3 ராஜயோகங்களால் மகர ராசிக்காரர்களுக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல வருமானம் கிடைக்கும். பணியிடத்தில் கொடுக்கப்பட்ட வேலைகளை வெற்றிகரமாக செய்து முடித்து, பாராட்டைப் பெறுவீர்கள். நிதி நிலை வலுவடையும்.