கண்ணீருடன் ஓய்வு பெற்றார் இந்திய கிரிக்கெட் அணி ரஹானே!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அஜின்க்யா ரஹானே, சர்வதேச கிரிக்கெட் மற்றும் அனைத்து கிரிக்கெட்டிலிருந்தும் தனது ஓய்வை அறிவித்துள்ளார்.
வாழ்க்கையிலும் சரி துடுப்பாட்டத்திலும் சரி சரியான நேரம் முக்கியம் எனக் குறிப்பிட்ட அவர், ஓய்வு பெற இதுவே சரியான தருணம் எனக் கூறியுள்ளார். எப்போதும் நாட்டையும் அணியையும் முன்னிறுத்தி முழு நேர்மையுடன் விளையாடியதாகத் தெரிவித்துள்ளார்.

ரசிகர்களின் இதயங்களில் தான் பெற்ற அன்பிற்கு நன்றி
வெற்றிகள் மற்றும் தோல்விகளைச் சந்தித்திருந்தாலும், தனது தவறை ஏற்றுக்கொண்டு, ரசிகர்களின் இதயங்களில் தான் பெற்ற அன்பிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.
மேலும், அடுத்த கட்ட பயணமாக போட்டியிலிருந்து ஓய்வு பெற்றாலும், அடுத்த தலைமுறை வீரர்களுக்கு வழிகாட்டி விளையாட்டுக்குத் திரும்பப் பங்களிப்பேன் எனக் கூறியுள்ளார்.
அத்துடன், பி.சி.சி.ஐ, எம்.சி.ஏ, சக வீரர்கள், பயிற்சியாளர்கள், ஐ.பி.எல் உரிமையாளர்கள், தனது குடும்பத்தினர் (மனைவி உட்பட) மற்றும் தொடர்ந்து ஆதரவளித்த இரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
தனது இந்தியாவின் 278ஆவது டெஸ்ட் வீரராகஉத்தியோகபூர்வமாகப் பதிவானார் என்பதையும், அணி எண் 278 என்பதைக் குறிப்பிட்டு, விடைபெறுகிள்றது என்று கூறி தனது உரையை முடித்துள்ளார்.