குருவால் உச்சத்திற்கு செல்லப்போகும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா?

Horoscope Astrology Hinduism
By Sahana May 20, 2026 12:58 AM GMT
Report

ஆண்டுக்கு ஒருமுறை பெயர்ச்சி அடையக் கூடிய குருபகவான், பன்னிரண்டு வருடங்களுக்கு ஒருமுறை தனது உச்ச ராசியான கடகத்துக்கு வருவார். அந்த சமயத்தில் பொதுவாக எல்லா ராசியினருக்குமே நன்மைகள் அதிகமாகவே நடக்கும். அதேசமயம், மற்ற கிரஹங்களின் சேர்க்கை, குருபகவானின் விசேஷப் பார்வைகள் பதியும் இடம் போன்றவற்றின் அடிப்படையில் பலாபலன்களின் அளவு கூடும் அல்லது குறையும்.

குருவால் உச்சத்திற்கு செல்லப்போகும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா? | Guru Peyarchi Zodiac Signs That Will Reach The Top

இந்தப் பராபவ வருடத்தில், வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி 26.5.2026 அன்று, மிதுனம் ராசியில் இருந்து தனது உச்ச ராசியான கடகத்துக்குப் பெயர்ச்சி ஆகிறார். இந்த அமைப்பின் காரணமாக எந்தெந்த ராசியினருக்கு என்ன மாதிரியான பலன்கள் ஏற்படும் என நாம் இங்கு பார்ப்போம்.

குருவால் உச்சத்திற்கு செல்லப்போகும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா? | Guru Peyarchi Zodiac Signs That Will Reach The Top

 மேஷம் எண்ணங்கள் ஈடேறக் கூடிய காலகட்டம். அலுவலகத்தில் மேலதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். உடனிருப்போர் ஆதரவு கிட்டும். எதிர்பாரா பயணங்களால் ஆதாயம் உண்டாகும். எதிர்பார்த்த மேன்மைகள் கைகூடி மகிழ்வு தரும். இல்லத்தில் சீரான போக்கு நிலவும். சுபகாரியத் தடைகள் நீங்கும். பணவரவை சேமிக்கப் பழகுவது நல்லது. வரவுக்கு ஏற்ப செலவும் வரும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. வாரிசுகளால் பெருமை சேரும். செய்யும் தொழில் எதுவானாலும் அதில் நேரடி கவனம் முக்கியம்.
 ரிஷபம்திட்டமிட்டு செயல்பட்டால், ஏற்றமும் மாற்றமும் ஏற்படக்கூடிய காலகட்டம். அலுவலகத்தில் திட்டமிடலும் நேரம் தவறாமையும் முக்கியம். உடனிருப்போர் குறைகளை பெரிதுபடுத்த வேண்டாம்.சிலருக்கு பணி சார்ந்த பயணங்கள் தடைபடலாம். அது நன்மைக்கே என்பதை உணருங்கள். பதவி, ஊதிய உயர்வுகள் தாமதமானாலும் கைகூடும். வீட்டில் விட்டுக்கொடுத்தல் முக்கியம். புதிய உறவுகளிடம் வீண் கடுமை வேண்டாம். வாரிசுகள் வாழ்வில் சுபகாரியங்கள் கைகூடும். பூர்வீக சொத்து லாபம் தரும். செய்யும் தொழிலில் நிதானமே ஏற்றம் தரும்.
மிதுனம் உழைப்பினால் உயர்வுகள் பெறவேண்டிய காலகட்டம். அலுவலகத்தில் தளராத உழைப்பினால் தலை நிமிர்ந்து நடப்பீர்கள். உடனிருக்கும் யாருடனும் வீண் உரசல் வேண்டாம். பணத்தைக் கையாளும் பொறுப்பில் கவனச் சிதறல் கூடவே கூடாது. இல்லத்தில் நிம்மதி இடம்பிடிக்கும். கடினமான வார்த்தைகளால் அதை விரட்டிவிட வேண்டாம். ஆடை, ஆபரணம், பொருள் சேரும். வீடு, மனை சார்ந்த பத்திரங்களை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்காள். பழைய கடன்களை நேரடியாகச் சென்று பைசல் செய்யுங்கள். செய்யும் வர்த்தகத்தில் வளர்ச்சி ஏற்படும். புதிய ஒப்பந்தங்களில் நிதானம் தேவை. அரசுத்துறையில் இருப்போர்க்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி, ஊதிய உயர்வுகள் கிட்டும் அறிகுறிகள் தெரியத்தொடங்கும்.
 கடகம் உயர்வுகளுக்கு உத்தரவாதம் கிட்டக் கூடிய காலகட்டம்.. அலுவலகத்தில் திறமைக்கு ஏற்ப உயர்வுகள் வரும். பொறுப்புகளை திட்டமிட்டு நேரடி கவனத்துடன் செய்வது நல்லது. மேலிடத்தால் பாராட்டப்படுவீர்கள். புதிய பணி தேடுவோர்க்கு வாய்ப்புகள் தேடி வரும். குடும்பத்தில் குழப்ப சூழல் மறையும். வாழ்க்கைத் துணையுடன் அன்யோன்யம் உருவாகும். வாரிசுகள் விஷயத்தில் வீண் கண்டிப்பு வேண்டாம். உறவுகளிடையே உங்கள் செல்வாக்கு உயரும். செய்யும் தொழிலில் சீரான வளர்ச்சி ஏற்படும். அதில் நேரான கவனமும் நேர்மையும் இருந்தால் நன்மைகள் தொடர்ச்சியாகும்.
 சிம்மம்பொறுமையுடன் செயல்பட்டால், பெருமைகள் கூடும் காலகட்டம். பணியிடத்தில் உங்கள் திறமை உரியவர்களால் உணரப்படும். உடனிருப்போர் ஆதரவு கிடைக்கும். பலகாலக் கனவுகள் கைகூடி வரும் அறிகுறிகள் தெரியும். தேவையற்ற படபடப்பு தவிர்ப்பது நல்லது. வீட்டில் சுபகாரியங்கள் கைகூடிவரும். பெற்றோர் பெரியோர் உடல்நலம் சீராகும். உறவுகள் வருகையும் அதனால் ஆதாயமும் ஏற்படும். யாரிடமும் வீண் கடுமை வேண்டாம். வாழ்க்கைத் துணையிடம் விட்டுக்கொடுத்துச் செல்லுங்கள். செய்யும் தொழிலில் வளர்ச்சிப்பாதை தெரியத்தொடங்கும்.
கன்னி  சிந்தித்து செயல்பட்டால், சீரான நன்மைகள் ஏற்படக் கூடிய காலகட்டம். அலுவலகத்தில் எதிர்பார்த்த பதவி, ஊதிய உயர்வுகள் வந்துசேரும். அனுபவம் மிக்கவர்கள் ஆலோசனைகளை அவசியம் கேளுங்கள். கையெழுத்திடும் சமயங்களில் கவனமாக இருங்கள். வீட்டில் விசேஷங்கள் வரத்தொடங்கும். விட்டுக்கொடுத்துப் போனால் நிம்மதி நிரந்தரமாகும். வாரிசுகள் வாழ்வில் சுபகாரியங்கள் கைகூடி வரும். பெற்றோர், பெரியோர் உடல்நலத்தில் கவனம் செலுத்துவது நல்லது. செய்யும் தொழிலில் நேரடி கவனமும் முயற்சிகளும் முக்கியம். பிறரை நம்பி பெரும் முதலீடுகள் செய்ய வேண்டாம். அரசுத்துறையில் இருப்பவர்கள் சீரான வளர்ச்சியைப் பெறுவீர்கள்.
 துலாம் திட்டமிட்டு செயல்பட்டால் தித்திக்கும் காலகட்டம். பணியிடத்தில் திறமைக்கு உரிய உயர்வுகள் நிச்சயம் வரும். அதேசமயம், யாருடைய தனிப்பட்ட விஷயத்திலும் நீங்கள் தலையிட வேண்டாம். இப்போதைய உழைப்பே எதிர்கால ஏற்றமாகும். குடும்பத்தில் நிம்மதி நிலைக்கும். வாழ்க்கைத்துணையுடன் மனம்விட்டுப் பேசுங்கள். பெரியோர் ஆலோசனைகளை அவசியம் கேளுங்கள். வாரிசுகள் விஷயத்தில் வீண் கண்டிப்பு வேண்டாம். ஆடை, ஆபரணம் சேரும்.அநாவசிய செலவுகளைத் தவிருங்கள். சகோதர உறவுகளால் ஆதாயம் உண்டு. செய்யும் தொழிலில் வளர்ச்சி தொடர்ச்சியாகும். புதிய அறிமுகங்களை நம்பி பெரிய முதலீடுகள் வேண்டாம்.
விருச்சிகம் ஏற்றமும் மாற்றமும் வரக்கூடிய காலகட்டம். பணியிடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். மேலதிகாரிகள் பாராட்டு கிட்டும். உடனிருப்போருடன் உரசல் தவிருங்கள். சிலருக்கு எதிர்பாரா இடமாற்றம் வரலாம். இல்லத்தில் இனிமை இடம்பிடிக்கும். உங்கள் வாக்கில் இனிமை இருந்தால், அது நிலைக்கும். உறவுகள் மத்தியில் செல்வாக்கு உயரும். சுப நிகழ்ச்சிகளில் முன் நின்று நடத்துவீர்கள். அசையும் அசையா சொத்து சேரும். செய்யும் தொழிலில் சேதாரம் குறைந்து ஆதாயம் அதிகரிக்கும். அயல்நாட்டு வர்த்தகத்தில் நேரடி கவனம் முக்கியம். அரசுத்துறையில் இருப்போர்க்கு ஆதாயங்கள் அதிகரிக்கும்.
தனுசு தன்னம்பிக்கை அதிகரிக்கும் காலகட்டம். அதைத் தலைகனம் ஆக்காதவரை உயர்வுகள் தொடரும். அலுவலகத்தில் உங்கள் திறமை உரியவர்களால் உணரப்படும். வீண் தர்க்கமும் வேண்டாத வாக்குறுதியும் யாரிடமும் வேண்டாம். மேலதிகாரிகள் தரும் பொறுப்பை நேரடி கவனத்துடன் செய்யுங்கள். எதிர்பாராத மாற்றம் வந்தால் தவிர்க்க வேண்டாம். குடும்பத்தில் ஒற்றுமை உருவாகும். வாழ்க்கைத் துணையுடன் வசந்தம் வீசும். சிலருக்கு புதிய வாழ்க்கை அமைவதற்கான அறிகுறிகள் தெரியும். குடும்பத்துப் பெரியவர்கள் உடல்நலனில் முன்னேற்றம் உருவாகும். குழந்தைகளால் பெருமை உண்டு. வரவு அதிகரித்தாலும் செலவுகளும் சேர்ந்து வரும். செய்யும் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். அயல்நாட்டு வர்த்தகத்தில் சட்ட நடைமுறைகளில் கவனம் தேவை.
மகரம் மேன்மைகள் அதிகரிக்கக் கூடிய காலகட்டம். பணியிடத்தில் எதிர்பார்த்த மாற்றமும் ஏற்றமும் கைகூடி வரும். அனுபவம் மிக்கவர்கள் ஆதரவு உயர்வுகளுக்கு உத்தரவாதமாகும். மேலதிகாரிகளால் உங்கள் திறமை உணரப்படும். சிலருக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரலாம். வீட்டில் நிம்மதி நிலவத்தொடங்கும். உங்கள் வாக்கில் நிதானம் இருந்தால், அது நிலைக்கும். வாரிசுகளால் பெருமை பெறுவீர்கள். வாழ்க்கைத் துணையுடன் அன்யோன்யம் அதிகரிக்கும். வாரிசுகளால் பெருமை சேரும். உறவுகளிடையே உங்கள் செல்வாக்கு உயரும்.தரல் பெறலை நேரடியாகச் செய்யுங்கள். செய்யும் தொழிலில் வளர்ச்சி நிலையாகும்.
கும்பம்பொறுப்புடன் செயல்பட்டால் பெருமைகள் நிலைக்கும் காலகட்டம். அலுவலகத்தில் உங்கள் திறமைக்கு ஏற்ற உயர்வுகள் நிச்சயம் வரும். உயரதிகாரிகளிடம் வீண் உரசல் வேண்டாம். உடனிருப்போர் ஆதரவு மகிழ்ச்சி தரும். இடமாற்றம், பதவி மாற்றத்தில் பொறுமை முக்கியம். பொறுப்புகள் எதையும் தட்டிக்கழிக்க வேண்டாம். வீட்டில் விட்டுக்கொடுத்தல் முக்கியம். வாழ்க்கைத் துணை உடல்நலத்தில் கவனம் செலுத்துங்கள். சுபகாரியங்கள் கைகூடி வரும். வாரிகள் விஷயத்தில் வீண் கண்டிப்பு வேண்டாம். ஆடை, ஆபரணம் சேரும். பூர்வீக சொத்துகளில் பிடிவாதம் வேண்டாம். செய்யும் தொழிலில் உயர்வுகளுக்கு உத்தரவாதம் கிட்டும்.
மீனம் முயற்சிகள் பலன் தரக்கூடிய காலகட்டம். பணியிடத்தில் திட்டமிடலும் நேரம் தவறாமையும் முக்கியம். எந்த சமயத்திலும் வீண் ரோஷம் வேண்டாம். மேலதிகாரிகளிடம் தர்க்கம் தவிருங்கள். யாருடைய குறையையும் விமர்சிப்பது கூடவே கூடாது. பொறுப்புகள் அதிகரித்தாலும் புலம்பாமல் ஏற்பது நல்லது. குடும்பத்தில் சீரான போக்கு நிலவும். வாழ்க்கைத் துணை உடல்நலத்தில் கவனம் செலுத்துங்கள். பெற்றோர் பெரியோர் வார்த்தைகளைக் கேட்டால் சுபகாரியத் தடைகள் நீங்கும். கர்ப்பிணிகள் கவனமாக இருப்பது நல்லது. பணவரவை சேமிக்கப் பழகுங்கள். யாருக்கும் வாக்குறுதி தரும் முன் யோசியுங்கள். செய்யும் தொழிலில் வளர்ச்சி தொடர்ச்சியாகும். தேவையற்ற வர்த்தகக் கடன்களைத் தவிருங்கள். அரசுத்துறையில் உள்ளோர் அடக்கமான செயல்களால் முன்னேறலாம்.
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US