குருவின் வக்ர பெயர்ச்சி: எந்தெந்த ராசிகள் பண மழையில் நனைய போகிறார்கள் தெரியுமா?
எதிர்வரும் இரு நாட்களில் நிகழவிருக்கும் குருவின் வக்ர பெயர்ச்சியால், எந்தெந்த ராசிகள் குபேரனின் பண மழையில் நனைய போகிறார்கள் என்பதை இந்த பதிவின் மூலம் காணலாம்...
ஜோதிடத்தின் படி, குருவின் சுப பார்வையால் பல்வேறு ராசிக்காரர்களும் பலன் அடைகிறார்கள். ஏனெனில், வியாழன் கிரகம் அறிவுத்திறன், வளர்ச்சி, செல்வம், மற்றும் நல்லொழுக்கம் போன்றவற்றின் காரணியாக இருக்கிறார்.
இந்த நிலையில், இன்னும் இரண்டு நாட்களில் குரு பகவான் பிற்போக்காக நகர்வார். ஆம், ஜூலை 29-ம் திகதி, குரு பகவான் அல்லது வியாழன் கிரகம் அதன் சொந்த ராசியான மீனத்தில் வக்ர நிலையில் நுழைகிறார்.
பிற்போக்கு இயக்கமும், நேரடி இயக்கமும் கிரகங்களின் அடிப்படையில் மிகவும் சிறப்பு வாய்ந்தவையாகும். இவை பல்வேறு ராசிகளில் சுப மற்றும் அசுப விளைவுகளை ஏற்படுத்தும். வியாழன் ஏப்ரல் மாதம் மீன ராசியில் நுழைந்தார். இப்போது அவர் அதே ராசியில் வக்ரமாவார்.
குருவின் சுப பார்வையால் பல்வேறு ராசிக்காரர்களும் பலன் அடைகிறார்கள். அதன்படி, எந்தெந்த ராசிகளுக்கு குருவின் அதிர்ஷ்டம் அதிகம் இருக்கும், என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்து கொள்வோம்.
ரிஷபம் : ரிஷப ராசிக்காரர்களுக்கு வியாழனின் வக்ர பெயர்ச்சி 11-ம் வீட்டில் நடக்கிறது. இந்த ராசிக்காரர்களின் நீண்ட நாள் திட்டம் நிறைவேறும். வணிகத்தில் ஈடுபட்டிருக்கும் ரிஷப ராசிக்காரர்களுக்கு இது நல்ல காலமாக இருக்கும்.
இந்த காலத்தில் ரிஷப ராசிக்காரர்கள் சில லாபகரமான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். எனினும், இந்த ஒப்பந்தங்களை மேற்கொள்ளும் முன் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது.
விருச்சிகம் : விருச்சிக ராசிக்காரர்களுக்கு குரு வக்ர பெயர்ச்சி அனுகூலமான கால அமைப்பை கொண்டு வரும். இது தவிர புதிய வேலைகளில் கவனம் செலுத்தி லாபம் ஈட்டுவீர்கள். நீண்ட நாட்களாக திருமணம் தடைபட்டு இருந்த காரியம் கைகூடும். சொந்த வாழ்க்கையிலும், தொழில் வாழ்க்கையிலும் அதிகப்படியான லாபம் காண்பீர்கள்.
கும்பம்: கும்ப ராசிக்காரர்களுக்கு வியாழன் பின்னோக்கி நகர்வது நல்லதாக அமையும். கும்ப ராசிக்காரர்களுக்கு பணியிடத்திலும் வியாபாரத்திலும் லாபம் கிடைக்கும். முன்னோர்களின் ஆசிர்வாதத்தாலும் ஆதாயம் அடைவீர்கள்.
இந்த கலாத்தில் தான தர்மங்களை விடாமல் செய்வது நல்லது. நிதி நிலை வலுவடையும். கும்பம் ராசிக்காரர்களுக்கு மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். தொழிலில் வெற்றி பெறுவீர்கள். பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு.