இன்று குருப்பெயர்ச்சி 2026 ; 12 ஆண்டுகளுக்கு பிறகு நிகழும் அதிசயம்; பெரும் யோகத்தைப் பெறப்போகும் ராசிகள்

Today Rasi Palan Guru Peyarchi Horoscope Astrology
By Vironika May 26, 2026 01:26 AM GMT
Report

ஆண்டுக்கு ஒருமுறை பெயர்ச்சி அடையக் கூடிய குருபகவான், பன்னிரண்டு வருடங்களுக்கு ஒருமுறை தனது உச்ச ராசியான கடகத்துக்கு வருவார். அந்த சமயத்தில் பொதுவாக எல்லா ராசியினருக்குமே நன்மைகள் அதிகமாகவே நடக்கும்.

இந்தப் பராபவ வருடத்தில், வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி 26.5.2026 அன்று பகல் 11 மணிக்கு குருபகவான், மிதுனம் ராசியில் இருந்து தனது உச்ச ராசியான கடகத்துக்குப் பெயர்ச்சி ஆகிறார். திருக் கணிதப்படி 2.6.2026 அன்று பெயர்ச்சி ஆகிறார். இதன் காரணமாக எந்தெந்த ராசியினருக்கு என்ன மாதிரியான பலன்கள் ஏற்படும் என  விரிவாக பார்க்கலாம்.

இன்று குருப்பெயர்ச்சி 2026 ; 12 ஆண்டுகளுக்கு பிறகு நிகழும் அதிசயம்; பெரும் யோகத்தைப் பெறப்போகும் ராசிகள் | Guru Peyarchi 2026 Jupiter Transit Predictions

 என்ன மாதிரியான பலன்கள்.. 

மேஷம்: எண்ணங்கள் ஈடேறக் கூடிய காலகட்டம். அலுவலகத்தில் மேலதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். உடனிருப்போர் ஆதரவு கிட்டும். எதிர்பாரா பயணங்களால் ஆதாயம் உண்டாகும். எதிர்பார்த்த மேன்மைகள் கைகூடி மகிழ்வு தரும். இல்லத்தில் சீரான போக்கு நிலவும். சுபகாரியத் தடைகள் நீங்கும். பணவரவை சேமிக்கப் பழகுவது நல்லது. வரவுக்கு ஏற்ப செலவும் வரும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. வாரிசுகளால் பெருமை சேரும். செய்யும் தொழில் எதுவானாலும் அதில் நேரடி கவனம் முக்கியம்.

ரிஷபம்:திட்டமிட்டு செயல்பட்டால், ஏற்றமும் மாற்றமும் ஏற்படக்கூடிய காலகட்டம். அலுவலகத்தில் திட்டமிடலும் நேரம் தவறாமையும் முக்கியம். உடனிருப்போர் குறைகளை பெரிதுபடுத்த வேண்டாம்.சிலருக்கு பணி சார்ந்த பயணங்கள் தடைபடலாம். அது நன்மைக்கே என்பதை உணருங்கள். பதவி, ஊதிய உயர்வுகள் தாமதமானாலும் கைகூடும். வீட்டில் விட்டுக்கொடுத்தல் முக்கியம். புதிய உறவுகளிடம் வீண் கடுமை வேண்டாம். வாரிசுகள் வாழ்வில் சுபகாரியங்கள் கைகூடும். பூர்வீக சொத்து லாபம் தரும். செய்யும் தொழிலில் நிதானமே ஏற்றம் தரும்.

இவற்றை எல்லாம் நம்ப வேண்டாம் ; வடக்கு மக்களுக்கு ஆளுநரிடமிருந்து வந்த முக்கிய தகவல்

இவற்றை எல்லாம் நம்ப வேண்டாம் ; வடக்கு மக்களுக்கு ஆளுநரிடமிருந்து வந்த முக்கிய தகவல்

மிதுனம்: உழைப்பினால் உயர்வுகள் பெறவேண்டிய காலகட்டம். அலுவலகத்தில் தளராத உழைப்பினால் தலை நிமிர்ந்து நடப்பீர்கள். உடனிருக்கும் யாருடனும் வீண் உரசல் வேண்டாம். பணத்தைக் கையாளும் பொறுப்பில் கவனச் சிதறல் கூடவே கூடாது. இல்லத்தில் நிம்மதி இடம்பிடிக்கும்.  ஆடை, ஆபரணம், பொருள் சேரும். வீடு, மனை சார்ந்த பத்திரங்களை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்காள். செய்யும் வர்த்தகத்தில் வளர்ச்சி ஏற்படும். புதிய ஒப்பந்தங்களில் நிதானம் தேவை. அரசுத்துறையில் இருப்போர்க்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி, ஊதிய உயர்வுகள் கிட்டும் அறிகுறிகள் தெரியத்தொடங்கும்.

கடகம்: உயர்வுகளுக்கு உத்தரவாதம் கிட்டக் கூடிய காலகட்டம்.. அலுவலகத்தில் திறமைக்கு ஏற்ப உயர்வுகள் வரும். பொறுப்புகளை திட்டமிட்டு நேரடி கவனத்துடன் செய்வது நல்லது. புதிய பணி தேடுவோர்க்கு வாய்ப்புகள் தேடி வரும். குடும்பத்தில் குழப்ப சூழல் மறையும். வாழ்க்கைத் துணையுடன் அன்யோன்யம் உருவாகும். உறவுகளிடையே உங்கள் செல்வாக்கு உயரும். செய்யும் தொழிலில் சீரான வளர்ச்சி ஏற்படும். அதில் நேரான கவனமும் நேர்மையும் இருந்தால் நன்மைகள் தொடர்ச்சியாகும்.

சிம்மம்:பொறுமையுடன் செயல்பட்டால், பெருமைகள் கூடும் காலகட்டம். உடனிருப்போர் ஆதரவு கிடைக்கும். பலகாலக் கனவுகள் கைகூடி வரும் அறிகுறிகள் தெரியும். தே வீட்டில் சுபகாரியங்கள் கைகூடிவரும். பெற்றோர் பெரியோர் உடல்நலம் சீராகும். உறவுகள் வருகையும் அதனால் ஆதாயமும் ஏற்படும்.  வாழ்க்கைத் துணையிடம் விட்டுக்கொடுத்துச் செல்லுங்கள். செய்யும் தொழிலில் வளர்ச்சிப்பாதை தெரியத்தொடங்கும்.

கன்னி: சிந்தித்து செயல்பட்டால், சீரான நன்மைகள் ஏற்படக் கூடிய காலகட்டம். அலுவலகத்தில் எதிர்பார்த்த பதவி, ஊதிய உயர்வுகள் வந்துசேரும். அனுபவம் மிக்கவர்கள் ஆலோசனைகளை அவசியம் கேளுங்கள். கையெழுத்திடும் சமயங்களில் கவனமாக இருங்கள். வீட்டில் விசேஷங்கள் வரத்தொடங்கும். விட்டுக்கொடுத்துப் போனால் நிம்மதி நிரந்தரமாகும். வாரிசுகள் வாழ்வில் சுபகாரியங்கள் கைகூடி வரும். பெற்றோர், பெரியோர் உடல்நலத்தில் கவனம் செலுத்துவது நல்லது. செய்யும் தொழிலில் நேரடி கவனமும் முயற்சிகளும் முக்கியம். பிறரை நம்பி பெரும் முதலீடுகள் செய்ய வேண்டாம். அரசுத்துறையில் இருப்பவர்கள் சீரான வளர்ச்சியைப் பெறுவீர்கள்.

துலாம்: திட்டமிட்டு செயல்பட்டால் தித்திக்கும் காலகட்டம். பணியிடத்தில் திறமைக்கு உரிய உயர்வுகள் நிச்சயம் வரும். அதேசமயம், யாருடைய தனிப்பட்ட விஷயத்திலும் நீங்கள் தலையிட வேண்டாம். இப்போதைய உழைப்பே எதிர்கால ஏற்றமாகும். குடும்பத்தில் நிம்மதி நிலைக்கும். வாழ்க்கைத்துணையுடன் மனம்விட்டுப் பேசுங்கள். பெரியோர் ஆலோசனைகளை அவசியம் கேளுங்கள். ஆடை, ஆபரணம் சேரும்.அநாவசிய செலவுகளைத் தவிருங்கள். சகோதர உறவுகளால் ஆதாயம் உண்டு. செய்யும் தொழிலில் வளர்ச்சி தொடர்ச்சியாகும். புதிய அறிமுகங்களை நம்பி பெரிய முதலீடுகள் வேண்டாம்.

விருச்சிகம்: ஏற்றமும் மாற்றமும் வரக்கூடிய காலகட்டம். பணியிடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். மேலதிகாரிகள் பாராட்டு கிட்டும். உடனிருப்போருடன் உரசல் தவிருங்கள். சிலருக்கு எதிர்பாரா இடமாற்றம் வரலாம். இல்லத்தில் இனிமை இடம்பிடிக்கும். உங்கள் வாக்கில் இனிமை இருந்தால், அது நிலைக்கும். உறவுகள் மத்தியில் செல்வாக்கு உயரும். சுப நிகழ்ச்சிகளில் முன் நின்று நடத்துவீர்கள். அசையும் அசையா சொத்து சேரும். செய்யும் தொழிலில் சேதாரம் குறைந்து ஆதாயம் அதிகரிக்கும். அயல்நாட்டு வர்த்தகத்தில் நேரடி கவனம் முக்கியம். அரசுத்துறையில் இருப்போர்க்கு ஆதாயங்கள் அதிகரிக்கும்.

மூத்த பிக்குவால் துஸ்பிரயோகத்திற்குள்ளான சிறுமி ; பெண் எம்.பிக்கள் எடுத்துள்ள அதிரடி தீர்மானம்

மூத்த பிக்குவால் துஸ்பிரயோகத்திற்குள்ளான சிறுமி ; பெண் எம்.பிக்கள் எடுத்துள்ள அதிரடி தீர்மானம்

தனுசு: தன்னம்பிக்கை அதிகரிக்கும் காலகட்டம். அதைத் தலைகனம் ஆக்காதவரை உயர்வுகள் தொடரும். அலுவலகத்தில் உங்கள் திறமை உரியவர்களால் உணரப்படும். வீண் தர்க்கமும் வேண்டாத வாக்குறுதியும் யாரிடமும் வேண்டாம். மேலதிகாரிகள் தரும் பொறுப்பை நேரடி கவனத்துடன் செய்யுங்கள். எதிர்பாராத மாற்றம் வந்தால் தவிர்க்க வேண்டாம். குடும்பத்தில் ஒற்றுமை உருவாகும். வாழ்க்கைத் துணையுடன் வசந்தம் வீசும். சிலருக்கு புதிய வாழ்க்கை அமைவதற்கான அறிகுறிகள் தெரியும். குடும்பத்துப் பெரியவர்கள் உடல்நலனில் முன்னேற்றம் உருவாகும். குழந்தைகளால் பெருமை உண்டு. வரவு அதிகரித்தாலும் செலவுகளும் சேர்ந்து வரும். செய்யும் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். அயல்நாட்டு வர்த்தகத்தில் சட்ட நடைமுறைகளில் கவனம் தேவை.

மகரம்: மேன்மைகள் அதிகரிக்கக் கூடிய காலகட்டம். பணியிடத்தில் எதிர்பார்த்த மாற்றமும் ஏற்றமும் கைகூடி வரும். அனுபவம் மிக்கவர்கள் ஆதரவு உயர்வுகளுக்கு உத்தரவாதமாகும். மேலதிகாரிகளால் உங்கள் திறமை உணரப்படும். சிலருக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரலாம். வீட்டில் நிம்மதி நிலவத்தொடங்கும். உங்கள் வாக்கில் நிதானம் இருந்தால், அது நிலைக்கும். வாரிசுகளால் பெருமை பெறுவீர்கள். வாழ்க்கைத் துணையுடன் அன்யோன்யம் அதிகரிக்கும். வாரிசுகளால் பெருமை சேரும். உறவுகளிடையே உங்கள் செல்வாக்கு உயரும்.தரல் பெறலை நேரடியாகச் செய்யுங்கள். செய்யும் தொழிலில் வளர்ச்சி நிலையாகும்.

கும்பம்:பொறுப்புடன் செயல்பட்டால் பெருமைகள் நிலைக்கும் காலகட்டம். அலுவலகத்தில் உங்கள் திறமைக்கு ஏற்ற உயர்வுகள் நிச்சயம் வரும். உயரதிகாரிகளிடம் வீண் உரசல் வேண்டாம். உடனிருப்போர் ஆதரவு மகிழ்ச்சி தரும். இடமாற்றம், பதவி மாற்றத்தில் பொறுமை முக்கியம். பொறுப்புகள் எதையும் தட்டிக்கழிக்க வேண்டாம். வீட்டில் விட்டுக்கொடுத்தல் முக்கியம். வாழ்க்கைத் துணை உடல்நலத்தில் கவனம் செலுத்துங்கள். சுபகாரியங்கள் கைகூடி வரும். வாரிகள் விஷயத்தில் வீண் கண்டிப்பு வேண்டாம். ஆடை, ஆபரணம் சேரும். பூர்வீக சொத்துகளில் பிடிவாதம் வேண்டாம். செய்யும் தொழிலில் உயர்வுகளுக்கு உத்தரவாதம் கிட்டும்.

பாலியல் வன்கொடுமையின் பின் படுகொலை செய்யப்பட்ட 10 வயது சிறுமி ; தமிழக முதல்வர் விஜய்யின் அதிரடி

பாலியல் வன்கொடுமையின் பின் படுகொலை செய்யப்பட்ட 10 வயது சிறுமி ; தமிழக முதல்வர் விஜய்யின் அதிரடி

மீனம்: முயற்சிகள் பலன் தரக்கூடிய காலகட்டம். பணியிடத்தில் திட்டமிடலும் நேரம் தவறாமையும் முக்கியம். எந்த சமயத்திலும் வீண் ரோஷம் வேண்டாம். மேலதிகாரிகளிடம் தர்க்கம் தவிருங்கள். யாருடைய குறையையும் விமர்சிப்பது கூடவே கூடாது. பொறுப்புகள் அதிகரித்தாலும் புலம்பாமல் ஏற்பது நல்லது. குடும்பத்தில் சீரான போக்கு நிலவும். வாழ்க்கைத் துணை உடல்நலத்தில் கவனம் செலுத்துங்கள். பெற்றோர் பெரியோர் வார்த்தைகளைக் கேட்டால் சுபகாரியத் தடைகள் நீங்கும். கர்ப்பிணிகள் கவனமாக இருப்பது நல்லது. பணவரவை சேமிக்கப் பழகுங்கள். யாருக்கும் வாக்குறுதி தரும் முன் யோசியுங்கள். செய்யும் தொழிலில் வளர்ச்சி தொடர்ச்சியாகும். தேவையற்ற வர்த்தகக் கடன்களைத் தவிருங்கள். அரசுத்துறையில் உள்ளோர் அடக்கமான செயல்களால் முன்னேறலாம். 

5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Bremerhaven, Germany, Fribourg, Switzerland, Chennai, India

24 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஜேர்மனி, Germany, Scarborough, Canada

25 May, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், India, Toronto, Canada

13 Jun, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இறுப்பிட்டி, கொழும்பு, யாழ்ப்பாணம்

26 May, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, London, United Kingdom

26 May, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Scarborough, Canada, London, United Kingdom

25 May, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, வவுனியா

06 Jun, 2014
மரண அறிவித்தல்

புளியந்தீவு, Toronto, Canada, புங்குடுதீவு, மட்டக்களப்பு

25 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
அகாலமரணம்

மல்லாகம், Scarborough, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Ajax, Canada

23 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொட்டாஞ்சேனை, கல்கிசை

24 Apr, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, கிளிநொச்சி, Toronto, Canada

25 May, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, வவுனியா, கனடா, Canada

23 May, 2018
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Luzern, Switzerland

23 May, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், பிரான்ஸ், France

25 May, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Coventry, United Kingdom

24 May, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை சிறுவிளான்

24 May, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, மல்லாகம், London, United Kingdom

21 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada

08 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி மேற்கு, பருத்தித்துறை

24 May, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், London, United Kingdom

25 May, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
மரண அறிவித்தல்

கோண்டாவில், கொழும்பு, Scarborough, Canada

21 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US