இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாமில் பயங்கரம்; தலைவா் வெட்டிக் கொலை

Refugee Sri Lankan Tamils Tamil nadu Murder
By Sulokshi Mar 08, 2026 07:50 AM GMT
Report

  சென்னையை அடுத்துள்ள கும்மிடிப்பூண்டி பெத்திக்குப்பம் பகுதியில் உள்ள இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாமின் தலைவா் நேற்று (07) இரவு இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாமில் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

கும்மிடிப்பூண்டியில் உள்ள இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாமில், 937 குடும்பங்களைச் சோ்ந்த 2,770 போ் வசித்து வருகின்றனா். 

முகாமின் தலைவராக இருப்பவா் சிவகுமாா் என்கிற கண்ணன் (42). இவா் நேற்று இரவு முகாம் பகுதியில் ஒரு பிரச்சினைக்காக சமரசம் செய்ய சென்றாா். அப்போது மா்ம கும்பலை சோ்ந்தவா்கள் அவரின் முகத்தில் சரமாரியாக வெட்டினா்.

ஆபத்தான நிலையில் கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சிவக்குமாரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா். 

இதுகுறித்து தகவல் அறிந்த இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாமை சோ்ந்த 300க்கும் மேற்பட்டோா் கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டனா்.

இதைத் தொடா்ந்து, மருத்துவமனை வளாகத்தில் பதற்றமான சூழல் நிலவியதால், பொலிஸாா் உடனடியாக ஆம்புலன்ஸை வரவழைத்து, கண்ணனின் சடலத்தை பிரேதப் பரிசோதனைக்காக பொன்னேரி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். 

கும்மிடிப்பூண்டி சிப்காட் பொலிஸாரின் விசாரணையில், முகாமைச் சோ்ந்த கும்பல் ஒன்று, முன் விரோதம் காரணமாக சிவக்குமாரை கொலை செய்ததாக கூறப்படுகிறது.

இந்த சூழலில் கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாமில் பதற்றமான சூழல் நிலவுவதால், ஏராளமான பொலிஸார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனா். மேலும் இந்த கொலை சம்பவம் குறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் பொலிஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US