றீச்சாவில் ஒரே வருடத்தில் காய்த்து குலுங்கும் கொய்யா பழங்கள் (Video)!
பொதுவாக வீட்டின் நாம் பயிடக்கூடிய பல பயந்தரு மரங்கள் உள்ளன. வீட்டில் இருக்ககூடிய இடத்தை பொறுத்து தென்னை, பாக்கு மரங்கள், பலா , மா, வாழை போன்ற மரங்களும் நாம் வள்ர்த்து வருவோம்.
எந்த மரம் வைத்தாலும் அதன் பலன்கள் நிச்சயம் நமக்கு கிடைக்கும். அதோடு தாவரங்கள் , மரங்கள் வளர்ப்பது வீட்டிற்கு மிகவும் நன்மை பயக்கும் என்பதுடன், எமது சுற்றுசூழலையும் நாம் பேணலாம்.
பயந்தரு மரங்களால் எமது வாழ்வாதரமும் செழிக்கும். அந்தவகையில் தாயகத்தில் தமிழர் பகுதியில் கிளிநொச்சி இயக்கிசியில் அமைந்துள்ள றீச்சா பண்ணையில் ஒரே வருடத்தில் பயன்பெறக்கூடிய கொய்யா மரங்கள் வளர்கப்பட்டு தற்போது அவற்றில் காய்கள் காய்த்துக்குலுங்குகின்றன.
நீங்களும் முடிந்தவரை வீடுகளில் இவ்வாறு பயன் தரு மரங்களை வளர்க்கலாம். பொருளாதார நெருக்கடியால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள எம்மக்களிற்கு வீட்டில் பயன் தரு மரங்கள் வளர்ப்பது முகவும் பயனுள்ளதாக இருக்கும்.