பசில் ராஜபக்சவுக்கு சர்வதேச பிடியாணை ; ராஜபக்ச குடும்பத்திற்கு தொடரும் சிக்கல்
வெளிநாட்டில் இருப்பதாகக் கூறப்படும் முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஷவைக் கண்டறிந்து, அவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்காக இன்டர்போலின் கோரப்பட்டுள்ளதாக பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.
மாத்தறை, பிரவுன்ஸ் ஹில் பகுதியில் காணி கொள்வனவு செய்தமை மற்றும் ஊவா மாகாண சபைத் தேர்தலின்போது சுற்றுலா மேம்பாட்டுப் பணியகத்தின் 7.8 மில்லியன் ரூபாய் செலவில் 12,000 டீ-ஷெர்ட்களை விநியோகித்தமை தொடர்பான விவகாரங்களில் பசில் ராஜபக்ஷ மீது பணமோசடி குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரங்கள் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில், வெளிநாட்டில் உள்ளதாகக் கூறப்படும் அவரைக் கண்டறிவதற்கும் மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் இன்டர்போலின் நீல அறிவிப்பை கோரியுள்ளதாக பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.