தர்பூசணித் துண்டிற்காக தொழிலதிபர் உள்ளிட்ட குழுவினர் செய்த மோசமான செயல்
கண்டியில் ஹோட்டல் ஒன்றில் சுற்றுலா பயணிகளிடம், பாதுகாப்பு தரப்பினரிடமும் தாக்குதலில் ஈடுபட்ட தொழிலதிபர் உள்ளிட்டகுழுவினர் தொடர்பில் கண்டி பொலிஸ் நிலையத்தில் முறைபாடு அளிக்கப்பட்டுள்ளது.
சம்வம் தொடர்பில் தெரியவருவதாவது,

சட்ட நடவடிக்கை
கடந்த 12ம் திகதி கண்டியில் ஹோட்டல் ஒன்றில் தங்யிருந்த சுற்றுலா பயணிகள் சிலர் தர்பூசணி பழத்தின் தோல் பகுதியை அருகிலுள்ள காணி பகுதிக்குள் வீசியுள்ளனர்.
இதனால் அப்பகுதியை சேர்ந்த சிலர் சுற்றுலா பயணிகள் மீதும் ஹோட்டல் பாதுகாப்பு தரப்பினர் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
தாக்குதல் நடத்தியவர்களில் தொழிலதிபர் ஒருவரும் உள்ளடங்குவதாக ஹோட்டல் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இச் சம்பவம் தொடர்பில் இதுவரை எதுவித சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் ஹோட்டல் நிர்வாகத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.